Serial: பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல் மூலம் ஒவ்வொரு ஆர்ட்டிஸ்ட்டுகளும் மக்களிடம் பிரபலமாகிவிடுவார்கள். அதிலும் சில ஆர்டிஸ்ட்டுகளுக்கு மறக்கவே முடியாத அளவிற்கு ரசிகர்கள் கிடைத்து விடுவார்கள். அந்த வகையில் தற்போது மகாநதி சீரியல் மூலம் விஜய் மற்றும் காவிரி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்கள்.
VIKA பான்ஸ் என்று ஒரு அடையாளத்தை உருவாக்கி விஜய் காவிரியை தூக்கி கொண்டாடும் அளவிற்கு அவர்களை ஆரவாரப்படுத்தி வருகிறார்கள். இவர்களால் தான் மகாநதி சீரியல் ஹிட்டாகி வருகிறது. அந்த அளவிற்கு இவர்களுடைய நடிப்பு கெமிஸ்ட்ரி காதல் ரொமான்ஸ் அனைத்தும் மக்களை கவர்ந்து விட்டது.
இன்னும் சொல்லப்போனால் நடிப்பையும் தாண்டி இவர்களை ஒன்று சேர்க்கும் வகையில் கமெண்ட்ஸ் மூலம் ரசிகர்கள் இவர்கள் நிஜமாகவே காதலிக்கிறார்களா? இல்லை என்றாலும் காதலித்து கல்யாணம் பண்ணால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு சில விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
இன்னும் அதிகப்படியான விஷயங்கள் என்னவென்றால் இருவரும் காதலித்து விட்டார்கள் அதனால் டேட்டிங் எல்லாம் போயிட்டு வருகிறார்கள் என்று பல சர்ச்சைகள் கிளம்பியதால் இதில் நடித்துவரும் காவேரி என்கின்ற பிரியா அதிக அளவில் பாதிக்கப்பட்டதாக தற்போது ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதாவது ஆரம்பத்தில் மகாநதி சீரியலில் நவீன் மற்றும் காவிரி கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது என்று மக்கள் ஆகோ ஓஹோ என்று கொண்டாடினார்கள். அதை பார்க்கும் பொழுது இது ஒரு சீரியல் இதுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று நான் நினைத்திருந்தேன்.
அதன்பிறகு விஜய் சீரியலுக்குள் நுழைந்ததும் டபுள் மடங்கு இல்ல நான்கு மடங்குக்கு மேல் அவர்களுடைய லிமிட்டை கிராஸ் பண்ணி என்னையும் விஜய்யும் தவறாக சித்தரித்து விட்டார்கள். ஆரம்பத்தில் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தாலும் இதுதான் சினிமா இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என மனப்பக்குவத்துக்கு வந்துவிட்டதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அத்துடன் இதற்கெல்லாம் காரணம் எங்களுடைய நடிப்பும் சீரியலும் தான் அதனால் மொத்த கிரெடிட்டும் எங்க டீமுக்கு தான் சேரும் என்று பாசிட்டிவாக சொல்லி இருக்கிறார். இதனால் இந்த சீரியல் ஹிட் ஆவதற்கு முக்கிய காரணம் இயக்குனர் தான். ஒரு கதையே சொல்லும் பொழுது அவர் எந்த மாதிரியாக ரியாக்ஷன் கொடுக்க வேண்டும் என்று நடித்துக் காட்டி எங்களிடமிருந்து அதை கொண்டு வந்து விடுவார். அதனால் எல்லா பெருமையும் இயக்குனர் பிரவீனுக்கு சாரும் என்று விஜயும் பதிவிட்டு இருக்கிறார்.