திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

காவேரி கங்கா சேர்ந்து ராகினிக்கு கொடுக்கும் பதிலடி.. விஜய் தலையில் மிளகாய் அரைக்கும் குடும்பம்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி பற்றி கங்கா புரிந்து கொண்டதும் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமாக தினமும் ஒவ்வொரு நாளை கடந்து கொண்டு வருகிறார்கள். அத்துடன் குடும்பத்தில் பண பிரச்சனை வராமல் இருக்க வேண்டும் என்றால் அப்பளம் தொழிலை பிரபலப்படுத்த வேண்டும் என்று காவிரி ஐடியா கொடுக்கிறார்.

அப்பொழுது ஒட்டுமொத்த குடும்பம் சேர்ந்து இதற்கு மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்தினால் இன்னும் அனைத்து இடங்களிலும் நம்முடைய அப்பளகட்டு பிரபலமாகிவிடும் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் நதி என்ற பெயரில் தொடங்கிய அப்பளம் பிசினஸில் விளம்பரத்தில் விஜய்யை நடிக்க வைக்கலாம் என்று காவேரி முடிவெடுத்து இருக்கிறார்.

ஏமாந்து போய் நிற்கும் விஜய்

ஆனால் இதைப் பற்றி விஜய் இடம் எதுவும் சொல்லாமல் காவிரி அவரை தாஜா பண்ணி புகைப்படங்களை எடுப்பதற்கு பிளான் பண்ணி விட்டார். அந்த வகையில் விஜய்யை தனியாக வைத்து காவேரி ஃபோட்டோ ஷூட் பண்ணுகிறார். இதயெல்லாம் காவிரி குடும்பத்தில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிறகு அப்படியே கையில் எதேர்ச்சியாக அப்பளத்தை கொடுத்து விஜய் விளம்பரத்துக்கு ஏற்ற மாதிரி நடிக்கும் அளவிற்கு காவேரி செட்டப் செய்துவிட்டார். அதை பிரிண்ட் பண்ணி போஸ்டராக அனைத்து இடங்களிலும் ஒட்டிவிட்டார். இது தெரியாத விஜய் வழக்கம் போல் நடைபெச்சி செய்வதற்காக வெளியே போயிருக்கிறார்.

ஆனால் போன இடத்தில் எல்லாம் இவரை வித்தியாசமாக ஒவ்வொருவரும் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதன் பிறகு ஏன் இப்படி எல்லோரும் நம்மளை பார்க்கிறார்கள் என்று யோசித்த விஜய் சுவரில் ஒட்டி இருந்த போஸ்டரை பார்க்கிறார். அதன் பிறகு தான் காவிரி செய்த அட்ராசிட்டி பற்றி புரிந்து கொண்டார். உடனே அந்த போஸ்டர் கிழித்து விட்டு கோபத்துடன் வீட்டிற்கு போகிறார்.

வீட்டிற்கு போனதும் இது என்னது எனக்கு தெரியாமல் என்னிடம் எதுவும் சொல்லாமல் உன் இஷ்டத்துக்கு இப்படி பண்ணியிருக்கிறாய் என்று காவேரியிடம் கேட்கிறார். அதோடு காவிரியிடம் இதை வைத்து கோபப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதை வைத்து ராகினி எப்படியாவது பிரச்சனை பண்ணலாம் என்று யோசித்த நிலையில் காவேரி, விஜய்யை சமாதானப்படுத்தி விடுகிறார்.

இதற்கிடையில் காவிரியிடம் வம்பு இழுக்கும் விதமாக ராகினி மொட்டை மாடியில் இருந்து ஒரு பக்கெட் தண்ணி ஊற்றி விடுகிறார். இதனை பார்த்த கங்கா மற்றும் காவிரி, ராகினியை திட்டி விட்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் வீட்டில் இருந்த அழுக்குத் தண்ணியை மொத்தமாக கொண்டு வந்து ராகினி மீது ஊற்றி விடுகிறார்கள். அந்த வகையில் காவிரிக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து பதிலடி கொடுப்போம் என்கிற மாதிரி ராகினிக்கு ஆப்பு வைத்து விட்டார்கள்.

இதனை தொடர்ந்து விஜய் ஏமாந்து போன விஷயத்தில் காவிரிக்கு மட்டுமல்லாமல் காவேரி குடும்பத்திற்கும் இதில் சம்பந்தம் இருக்கிறது என்று தெரிந்தால் விஜய் இதை எப்படி எடுத்துக் கொள்வார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனாலும் காவேரி மீது இருக்கும் காதல் விஜய்யை கோபப்படாமல் தடுத்துவிடும். அத்துடன் இந்த ஐடியாவை கொடுத்தது தாத்தா தான் என்றால் விஜய்யின் கோபம் புஸ் என்று போய்விடும்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -

Trending News