ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நவீன் சொன்ன ஒத்த வார்த்தையால் விஜய்யிடம் இருந்து விலகும் காவேரி.. ராகினிக்கு பதில் யமுனா வைத்த சூனியம்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது விஜய்யிடம் உதவி கேட்டு நின்னார். விஜய்யும் நான் உனக்கு உதவி பண்ணுகிறேன், ஆனால் அதற்கு பதிலாக நீ என் மனைவியாக ஒரு வருடம் ஒப்பந்தத்தின் படி இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்பொழுது காவிரிக்கும் வேறு வழி இல்லாததால் விஜய் சொன்னபடி ஒப்பந்தத்தின்படி ஒரு வருடத்திற்கு மனைவி போல் வாழ்வதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் தாத்தாவிற்கு தெரிந்து விட்டது. அதனால் எப்படியாவது இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி எடுத்து வந்தார். அடுத்து ராகினி, காவிரியை பழி வாங்குவதற்கு அஜய்யை கல்யாணம் பண்ணிட்டு விஜய் வீட்டில் சில சில்லறைத்தனமான வேலைகளை பார்த்து வந்தார்.

காவிரியிடம் பத்த வச்ச யமுனா

ஆனால் அது விஜய் மற்றும் காவிரிக்குள் இருக்கும் அன்பினால் தோற்றுப் போய்விட்டது. இதனால் ஒரு காமெடி பீஸ் ஆக தான் ஒவ்வொரு நாளும் பல்பு வாங்கி வந்தார். அடுத்ததாக யமுனா, நவீனை கல்யாணம் பண்ண வேண்டும் என்ற ஆசைப்பட்டு நவீனை தேடி போனார். ஆனால் நவீன், யமுனா செய்த காரியத்தால் மொத்தமாக வெறுத்து பேசாமல் ஒதுங்கி போய்விட்டார்.

இதை தாங்கிக் கொள்ளாத யமுனா, காவேரியிடம் அழுது புலம்பிய நிலையில் நீ முதலில் படித்து முடி. அதன் பிறகு நான் நவீனுடன் சேர்த்து வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார். அதன்படி யமுனா தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி நல்லபடியாக எக்ஸாமை முடித்து விட்டார். இந்நிலையில் நவீன் இடம் பேச போன யமுனாவை கண்டுக்காமல் நவீன் உதாசீனப்படுத்தி விட்டார்.

அத்துடன் எப்பொழுதுமே என் மனதிற்குள் காவேரி மட்டும்தான் இருப்பாள். அவள் கூட தான் நான் சேர்ந்து வாழ்வேன் என்று யமுனாவிடம் சொல்லிவிட்டார். இதைக் கேட்ட யமுனா காவிரியிடம் நடந்த விஷயத்தை சொல்லி நவீனை பற்றியும் போட்டு கொடுத்து விடுகிறார்.

உடனே கோவப்பட்ட காவேரி, நவீன் இடம் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் எனக்கு கல்யாணம் ஆகிட்டு என்று தெரிந்தும் எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்க என்று சொல்லி இருக்கிறாய். என்ன மனுஷன் தான் நீங்க என்று உச்சகட்ட கோபத்தை காட்டுகிறார்.

அத்துடன் காவிரி, இவள்தானே எப்ப கூப்பிட்டாலும் திரும்பி வந்துவிடுவாள் என்று நினைத்தீர்களா என்று நவீனை பார்த்து கேட்கிறார். அதற்கு நவீன் கொஞ்சம் நிறுத்து, என்னை தேடி என் கூட வந்து விடுவ என்று சொல்கிறார். இதை கேட்டதும் காவிரி, நவீன் கன்னத்தில் அடிக்க போகிறார். ஆனால் நவீன் காவிரி கையை தடுத்து நிறுத்தி என்ன சும்மா கல்யாணம் ஆயிருச்சு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லிக்கிட்டு திரியிற.

உனக்கு உண்மையிலேயே கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்கிறார். அதற்கு காவிரி தாலியை காட்டிட்டு இது என்ன என்று கேட்கிறார். அப்பொழுது நவீன், உனக்கும் விஜய்க்கும் நிஜமா கல்யாணம் ஆகவில்லை, ஒப்பந்தத்தின் படி தான் ஒரு வருஷமாக புருஷன் பொண்டாட்டியாக நடிக்கிறீர்கள் என்று சொல்லிவிடுகிறார். இதை கேட்டு காவிரி அதிர்ச்சியில் நிற்கிறார்.

அப்பொழுது நவீன், எனக்கு எல்லா உண்மையும் தெரியும் விஜய் என்னிடம் சொல்லிவிட்டார். அவரே என்னுடன் உன்னை சேர்த்து வைப்பதாக சொல்லி இருக்கிறார் என்று கூறுகிறார். இதைக் கேட்டதும் காவேரி, அப்படி என்றால் விஜய்க்கு நம்ம மீது விருப்பம் இல்லையா என்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விடுகிறார். இதனை தொடர்ந்து விஜய் மனதில் நாம் இல்லை என்று தவறாக புரிந்த காவேரி மொத்தமாக அவரை விட்டு விலக நினைக்கிறார்.

இவருடைய வாழ்க்கையில் ராகினி தான் ஏதாவது கலகத்தை மூட்டி பிரச்சினை பண்ணுவார் என்று எதிர்பார்த்தால் யமுனாவே அக்காவின் வாழ்க்கையை சூனியம் ஆக்கிவிட்டார். இனி விஜய், காதலை சொல்ல வந்தாலும் காவேரி அதை ஏற்றுக் கொள்ள விரும்பாமல் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்துவிடுவார். அதே மாதிரி இன்னொரு பக்கம் வெண்ணிலாவின் கதையும் புதுசாக நுழைந்திருப்பதால் ஏகப்பட்ட சிக்கல்களை சந்திக்கும் அளவிற்கு கதைகள் இருக்கப் போகிறது.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News