திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

விஜய்யை தவறாக புரிந்து கொண்ட காவிரி.. கையும் களவுமாக சிக்கிய யமுனா

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரியை உசுப்பேத்தி வேடிக்கை பார்க்க வேண்டும் என்று ராகினி ஆசைப்பட்டார். அதற்கேற்ற மாதிரி விஜய், காவேரி, தாத்தா என அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ராகினியும் வருகிறார். அப்பொழுது பாட்டி, ராகினியை பார்த்து உனக்கு பசித்தால் நீ சீக்கிரம் சாப்பிட வா.

உன்னை யாரும் வந்து கூப்பிட்டு தாங்க மாட்டார்கள் என்று ராகினிடம் சொல்கிறார். அதற்கு ராகினி நானும் அது தான் சொல்றேன். நீங்கள் என்னை சாப்பிட கூப்பிட்டால் தான் எனக்கு ஏதோ வேற்று இடத்தில் இருக்கிற மாதிரி தெரிகிறது. அதனால் எனக்கு பசித்தால் நானே வந்து சாப்பிட்டுக் கொள்கிறேன். எல்லா உரிமையும் எனக்கு இருக்கிறது என்று தெனாவட்டாக பதில் சொல்கிறார்.

காவிரியை நோஸ்கட் பண்ணிய விஜய்

ஆத்துடன் அஜய்க்கு பரிமாறி பாசமாக இருப்பது போல் காவேரி முன் சீன் போடுகிறார். காவேரி கிட்ட உன்னுடைய ஜம்பம் எதுவும் பலிக்காது என்பதற்கேற்ப காவேரி, ராகினிக்கு ஒரு தரமான சம்பவத்தை செய்து விட்டார். அதாவது விஜய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு சாப்பாடு ஊட்டுவது, பாசமாக பேசுவது என்று ராகினியை வெறுப்பேத்த விஜய் மீது மொத்த காதலையும் கொட்டி அன்பைப் பொழிகிறார்.

இதை பார்த்து கடுப்பான ராகினி, மறுபடியும் காவிரியை உசுப்பேற்ற வேண்டும் என்பதற்காக அஜய்யிடம் நீங்கள் ஆபீஸ்க்கு போகும்போது இனி நானும் உங்களுடன் ஆஃபீஸ்க்கு வருகிறேன் என்று சொல்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய், அஜய்யிடம் இனி நீயே ஆபீசுக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன். இதுல ராகினி வந்து என்ன பண்ணப் போகிறார் என்று குதர்க்கமாக பேசி ராகினியை நோஸ்கட் பண்ணி விட்டார்.

ஆக மொத்தத்தில் ராகினி அந்த இடத்தில் அவமானப்பட்டு அசிங்கப்பட்டது தான் மிச்சம். பிறகு காவேரி, கங்கா இருக்கும் இடத்திற்கு போகிறார். ஆனால் கங்கா, யமுனாவின் செயல்கள் சரி இல்லாததால் போனை புடுங்கி விட்டு அதை செக் பண்ணுகிறார். அந்த போனை பார்க்கும் பொழுது நவீனுக்கு அடிக்கடி போன் பண்ணி பேசியது எல்லாம் தெரிகிறது. உடனே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் யமுனாவை விசாரிக்கிறார்கள்.

அதற்கு குமரன், நவீன் இவள் மீது கோபமாக இருக்கிறான். அவன் போன் எடுக்கவில்லை என்பதினால் யமுனா போன் பண்ணிக் கொண்டே இருக்கிறாள் என்று சொல்கிறார். உடனே குடும்பத்தில் இருப்பவர்கள் ஏன் நவீன் கோபமாக இருக்கிறான் என்று கேட்க குமரன், ராகினி அஜய்க்கு நடந்த ரகசிய கல்யாணத்துக்கு பின் உள்ள உண்மைகளை சொல்கிறார். இதனால் கடுப்பான ஒட்டுமொத்த குடும்பமும் யமுனாவை அடிக்கிறார்கள்.

பிறகு ஒரு வழியாக அனைவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு போகிறார் காவேரி. அங்கு போய் பார்த்தால் விஜய் தனக்குத்தானே சிரித்துக் கொண்டு ரொமான்டிக்காக இருக்கிறார். எதற்காக என்றால் காவிரி ஊட்டி விட்டு பாசமாக பேசியதை பார்த்து சந்தோஷத்தில் மெதக்கிறார். ஆனால் இதை தவறாக புரிந்து கொண்ட காவேரி, விஜய்யிடம் என்ன பாஸ் உங்கள் முன்னால் காதலி நினைத்து சந்தோஷப்படுறீங்க போல என்று நக்கல் அடிக்கிறார்.

ஆனால் விஜய் மனதிற்குள் காவிரி வந்துவிட்டார் என்பது தெரிந்தும் காவிரி தெரியாதபோல் நடந்து கொள்கிறார். இது எங்க போய் என்ன பிரச்சனையை உண்டாக்கப் போகிறதோ தெரியவில்லை. இதில் வேற ராகினிக்கு இவர்களைப் பற்றி உண்மை தெரிந்து விட்டால் இதை வைத்தே குளிர்காய ஆரம்பித்து விடுவார்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -

Trending News