புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Mahanadhi: காவிரிக்கு எதிராக திரும்பிய தங்கச்சி.. நினைத்ததை சாதித்துக் காட்டிய ராகினி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் மற்றும் காவிரி கொடைக்கானலில் நிம்மதியாக இரண்டு நாட்கள் இருந்துட்டு அதன் பின் ஊருக்கு போகலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். அதன் படி இருவரும் அங்கே இருந்து அவ்வப்போது காதல் மற்றும் ரொமாண்டிக் வார்த்தைகளை பேசி ஒருத்தரை ஒருத்தர் நெருங்கிக் கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் காவிரி வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டு அஜய், பசுபதியிடம் ராகினியை நான் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறார். இதற்கு யோசித்த பசுபதி, ராகினி சொன்ன ஐடியாவை புரிந்து கொண்டார். அதாவது காவேரி இருக்கும் வரை எனக்கு கல்யாணம் இப்போதைக்கு நடக்காது.

சுயநலத்திற்காக யமுனா செய்த காரியம்

அதனால் நான் அவருடைய வீட்டில் போய் பழியும் வாங்க முடியாது. இதுக்கெல்லாம் ஒரே தீர்வு அஜய்க்கும் எனக்கும் ரகசிய திருமணம் நடந்தால் மட்டும் தான் நான் அவர்கள் வீட்டிற்குள் போக முடியும் என்று சொல்கிறார். அப்போதுதான் காவிரியை நான் பழி வாங்குவதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று சொன்னதும் பசுபதி ஓகே என்று தலையாட்டி விடுகிறார்.

இதனைத் தொடர்ந்து ராகினி அஜய் கல்யாணம் யாருக்கும் தெரியாமல் கோவிலில் நடக்கப் போகிறது. இதை தெரிந்து கொண்ட நவீனின் நண்பர் நவீனுக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறார். நவீன் இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று யமுனாக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி குமரன்கிட்ட சொல்ல சொல்கிறார்.

ஆனால் யமுனா, ராகினிக்கும் அஜய்க்கும் கல்யாணம் நடந்தால் மட்டும் தான் என்னுடைய ரூட்டு கிளியர் ஆகும் என்று நினைத்து இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லவில்லை. இதனால் நவீன் போட்ட பிளான் படி அந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடுகிறது. கடைசியில் ராகினி நினைத்ததை சாதித்துக் காட்டும் வகையில் அஜய்யை ரகசியமாக திருமணம் செய்து கொள்வார்.

இதற்கிடையில் யமுனா தன் அக்கா காவேரி வாழ்க்கையை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் தன்னுடைய சுயநலத்திற்காக ராகினிக்கு ஒரு நல்லது நடக்க யமுனா ஒரு காரணமாக மாறிவிட்டார். பிறகு ராகினி விஜய் வீட்டிற்குள் வந்ததும் காவிரியை கண் கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் பழிவாங்க நினைக்கப் போகிறார்.

இப்பொழுது தான் விஜய்க்கும் காவிரிக்கும் ஒரு கெமிஸ்ட்ரியை ஒர்க் அவுட் இருக்கிறது. இன்னும் இதையெல்லாம் கலைக்கும் விதமாக ராகினி தினம் தினம் ஏதாவது ஒரு கூத்து பண்ணிக்கொண்டு பிரச்சனை பண்ண போகிறார்.

Trending News