Mahanadhi Serrial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், அஜய் மற்றும் ராகினிக்கு நிச்சயதார்த்தம் கோவிலில் வைத்து நடைபெறுகிறது. அதற்கு விஜய்யுடன் சேர்ந்து காவேரி, தாத்தா, பாட்டி அனைவரும் கோவிலுக்கு போய் விட்டார்கள். அங்கே பசுபதி நினைத்தபடி ராகினி மற்றும் அஜய்க்கு நிச்சயதார்த்த வேலைகள் அனைத்தும் நடைபெறுகிறது.
ஆனால் இந்த நிச்சயதார்த்தத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று காவிரி ஏற்கனவே ஒரு பிளான் போட்டுவிட்டார். அதே மாதிரி விஜய்க்கும் இந்த நிச்சயதார்த்தத்தில் ஏதோ ஒரு தடங்கல் நடக்கப் போகிறது என்று முன்கூட்டியே தெரியும். அதுவும் காவிரி தான் ஏதாவது பிளான் பண்ணி நிறுத்துவார் என்று நினைத்தார்.
அதே மாதிரியே ஒரு தரமான சம்பவம் ஏற்பட்டு விட்டது. அதாவது ராகினி மற்றும் அஜய் இருவரும் மாலை மாற்றி குடும்பத்தில் இருப்பவர்கள் தாம்பூல தட்டும் மாத்தி விட்டார்கள். பிறகு இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ளும் நேரத்தில் காவேரி மட்டும் ரொம்பவே பதட்டத்துடனே போன பார்த்துக் கொண்டிருக்கிறார்.
காவேரி செய்த தரமான சம்பவம்
அந்த வகையில் காவிரி இதை நிறுத்துவதற்கு ஏதோ ஒரு பிளான் பண்ணிவிட்டார் என்பது போல் தெரிந்தது. அதே மாதிரி மோதிரம் மாத்தும் அந்த தருணத்தில் போலீஸ் வந்து விடுகிறார்கள். உடனே பசுபதி யார் என்று போலீஸ் கேட்கிறார். பிறகு ராகினி மற்றும் அஜய் மோதிரம் மாற்றாமல் அப்படியே நின்று விட்டார்கள்.
இதனை தொடர்ந்து பசுபதி நான் தான் என்று சொல்கிறார். உடனே போலீஸ் உங்களை அரெஸ்ட் பண்ணுகிறோம் என்று சொல்கிறார். அதற்கு பசுபதி நான் என்ன பண்ணினேன் நீங்கள் எப்படி என்னை அரெஸ்ட் பண்ண வரலாம் என்று கேட்கிறார். உடனே போலீஸ் பொண்ணு கடத்தின விஷயத்தில் உங்க மேல புகார் வந்திருக்கிறது என்று சொல்கிறார்.
அதற்கு பசுபதி யார் என் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தார் என்று கேட்கிறார். அப்பொழுது அங்கிருந்த காவிரி தைரியமாக நான் தான் என்று சொல்கிறார். அதாவது காவேரி மற்றும் விஜய் கொடைக்கானல் போயிருந்த போது நவீனுக்கும் ராகினிக்கும் திருமணத்தை பண்ணி வைப்பதற்காக பசுபதி காவிரியை கடத்தினார்.
காவேரியை கடத்தி நவீனை பிளாக்மெயில் பண்ணி ராகினி கழுத்தில் தாலி கட்ட முயற்சி எடுத்தார். அதனால் இது சம்பந்தமான கடத்தல் முயற்சியில் பசுபதி மேல் காவேரி புகார் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த ஒரு விஷயம் பசுபதி மற்றும் ராகினிக்கு எதிராக திரும்பி விட்டது. அந்த வகையில் போலீஸ் பசுபதியை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகிறார்கள்.
இதனால் காவேரி நினைத்தபடி இந்த நிச்சயதார்த்தம் தடங்கலாக முடிந்து விடுகிறது. ஆனால் இது ஒரு நிரந்தரமான தீர்வு இல்லை. ஏனென்றால் அஜய் பொருத்தவரை ராகினி எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்ண வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அதனால் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி ராகினி அஜய்யை ஏமாற்றி திருட்டுத்தனமாக கல்யாணத்தை பண்ணிட்டு வீட்டிற்கு வந்து நிற்கப் போகிறார்.
ஏனென்றால் அப்பொழுதுதான் காவிரியை பழிவாங்க முடியும் என்பதினால். இதற்கிடையில் நிச்சயதார்த்தம் வரை குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வந்து நின்ற பின் அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்த காவிரி மீது விஜய் கோபப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வழக்கம் போல் இவர்களுடைய சண்டை அனைவரும் ரசிக்கும்படியாக டாம் அண்ட் ஜெர்ரி சண்டையாக தான் இருக்கும்.
பிறகு ராகினி அஜய்யை கல்யாணம் பண்ணிட்டு காவேரியை பழிவாங்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் காவிரி மற்றும் விஜய் புரிதல் நெருக்கமாக தான் அமையும்.