Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் நவீனிடம் சொன்ன வார்த்தையை நினைத்து காவிரி மனதளவில் உடைந்து போய்விட்டார். அப்படி என்றால் விஜய்க்கு நம் மீது எந்தவித விருப்பமும் இல்லை. நம்மை விட்டுப் பிரிய வேண்டும் என்று நினைக்க தான் செய்கிறார். அப்புறம் ஏன் ஒப்பந்தப்படி கல்யாணம் பண்ணியதை பேசவே கூடாது என்று மனதில் ஆசையை காட்டி பேசினார் என்று காவிரி யோசித்துப் பார்க்கிறார்.
இப்படி விஜய் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் காவிரிக்கு தொடர்ந்து யமுனாபால் பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது. அதாவது நவீன் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று சொல்லிய நிலையில் யமுனா நான் எக்ஸாம் எழுத ஏன் போக வேண்டும். யாருக்காக நான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று முடிவு பண்ணி வீட்டில் பிடிவாதமாக எக்ஸாம் எழுத மறுப்பு தெரிவிக்கிறார்.
குடும்பத்தின் நிம்மதியை கெடுத்த யமுனா
இதனால் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் என்ன பிரச்சினை என்று கேட்டு தொந்தரவு பண்ணுகிறார்கள். ஆனால் யமுனாவால் எந்த ஒரு விஷயத்தையும் சொல்ல முடியாததால் மௌனமாக இருக்கிறார். பிறகு அங்கு வந்த காவிரி, நான் யமுனாவிடம் பேசிட்டு வருகிறேன் என்று தனியாக கூட்டிட்டு போகிறார். அங்கே யமுனாவுக்கும் காவிரிக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடக்கிறது.
அந்த வாக்குவாதம் முடிந்த பிறகு கடைசியில் காவேரி, நீ எக்ஸாம் எழுதவில்லை என்றால் அம்மாவை பற்றி கொஞ்சமாவது யோசித்து பார்த்தியா? அவங்க உன்ன ரொம்ப நம்பி கனவு கண்டு வருகிறார்கள். நீ எக்ஸாம் எழுதாமல் இருந்தால் அவர்கள் உயிருக்கே கூட ஆபத்து வரலாம் என்று சொல்கிறார். இதைக் கேட்ட யமுனா நான் அம்மாவுக்காக எக்ஸாம் எழுத போகிறேன்.
ஆனால் உன்னை பற்றி விஷயங்கள் தெரிந்தால் உன்னால் தான் அம்மாவுக்கு ஏதாவது பிரச்சனை வரும். அப்படி மட்டும் அம்மாவுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உன்னை சும்மா விட மாட்டேன் என்று எதிர்த்து பேசி காவிரியை நோகடித்து விட்டார். பிறகு வீட்டில் இருப்பவர்கள் நீங்க இரண்டு பேரும் ஏதோ சேர்ந்து எங்களிடம் மறைக்கிறீர்கள் என்ன என்று கேட்கிறார்கள்.
அதற்கு அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை நான் யமுனாவை எக்ஸாமுக்கு கூட்டிட்டு போயிட்டு வருகிறேன் என்று காவிரி, யமுனா கிளம்பி விடுகிறார்கள். போகும்பொழுது விஜய் பார்த்ததால் நான் உங்களை டிராப் பண்ணுகிறேன் என்று சொல்கிறார். அதனால் விஜய் காரில், யமுனா மற்றும் காவிரி காலேஜுக்கு போகிறார்கள்.
போகும்போது விஜய் மட்டும் தொடர்ந்து பேசிக் கொண்டே வருகிறார். வழக்கம்போல் காவிரி தான் ஏதாவது பேசி நக்கல் அடிப்பார். ஆனால் காவிரி எதுவும் பேசாமல் இருப்பதால் விஜய் என்னாச்சு ஏதாவது பிரச்சனையா என்று அனுசரணையாக கேட்கிறார். இதை பார்த்த யமுனா, இப்படிப்பட்ட ஒரு நல்ல வாழ்க்கை விட்டுவிட்டு ஏன் இப்படி லூசுத்தனமா அலைகிறாய் என்று மனதிற்குள் காவிரியை திட்டிக் கொண்டு வருகிறார்.
இதற்கிடையில் நவீன், காவிரி பேசியதை யோசித்து கவலைப்படுகிறார். அத்துடன் யமுனா என்னால் எக்ஸாம் எழுதாமல் விட்டால், அந்த ஒட்டுமொத்த குடும்பத்தில் உள்ள கனவையும் நான் கெடுத்ததாக ஆகிவிடும். அதனால் யமுனாவை பார்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லிட்டு வருகிறேன் என்று நவீன் கிளம்புகிறார். அந்த வகையில் நவினும் காலேஜுக்கு வந்து விடுகிறார்.
ஆனால் நவீன் வருவதற்கு முன் யமுனா எக்ஸாம் எழுதப் போய்விட்டார். பிறகு வெளியில் காத்துக் கொண்டிருக்கும் காவிரி, நவீனை பார்த்து திட்டுகிறார். உங்களுக்கும் யமுனாக்கு தான் சம்பந்தம் இல்லை என்று சொல்லிட்டீங்களே, பின்ன ஏன் மறுபடியும் அவளை பார்த்து பேசுவதற்கு வருகிறீர்கள். உங்களால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனை தெரியுமா? எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் நான் தவித்து வருகிறேன்.
மறுபடி மறுபடி வந்து பிரச்சனையை பெருசாகாதீர்கள் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கே வந்து யமுனா, மீண்டும் காவிரி தான் கெட்டவள் என்பது போல் காவிரியை திட்டுகிறார். பிறகு காவிரி எதுவானாலும் வீட்டில் போய் பேசிக்கலாம் என்று யமுனாவை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார். இப்படி இவர்களுக்குள் நடக்கும் பிரச்சனை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருவதால் விஜய் மனசுக்குள் என் மீது காதல் இல்லை என்று காவேரி தவறாக புரிந்து கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து இன்னும் இந்த ஆட்டத்தை குளறுபடி ஆக்குவதற்கு வெண்ணிலா வேற புதுசாக நுழைந்து இருக்கிறார். இன்னும் இதையெல்லாம் கண்டுபிடித்து விட்டால் காவிரி, விஜய் மற்றும் வெண்ணிலாவை சேர்ப்பதற்கு முயற்சி எடுப்பார். ஆனால் இவர்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு தவிப்பது நவீன் தான்.
மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- நவீன் சொன்ன ஒத்த வார்த்தையால் விஜய்யிடம் இருந்து விலகும் காவேரி
- காவிரியிடம் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் விஜய்
- காவிரி மீது இருக்கும் தீராத காதல், அடங்கிப்போன விஜய்