செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025

மகாநதி சீரியலில் நவீன் வீட்டுக்கு அடைக்கலம் தேடி போகும் காவிரி குடும்பம்.. விஜய்யிடம் டிராமா பண்ணும் வெண்ணிலா

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி வீட்டு சாவியை கொடுத்துவிட்டு கிளம்புவதாக சொல்கிறார். ஆனால் மனசுக்குள் என்னை போக வேண்டாம் என்று விஜய் ஒரு வார்த்தை சொல்லுங்க என ஏக்கத்துடன் பார்க்கிறார். அதே மாதிரி விஜய், நான் உங்களை விட்டு போக மாட்டேன் என்று சொல்லு என காவேரியிடம் எதிர்பார்க்கிறார்.

இப்படி இவர்கள் இரண்டு பேரும் எதிர்பார்ப்பை மனதில் வைத்துக்கொண்டு வெளிப்படுத்தாமல் இருப்பதினால் தான் தற்போது இவ்வளவு பிரச்சனையை சந்தித்திருக்கிறார்கள். ஆனாலும் இரண்டு பேரும் மௌனம் காத்த நிலையில் காவேரி சாவியை கொடுத்துவிட்டு குடும்பத்துடன் கிளம்பி விடுகிறார். காவிரி போவதையும் தடுக்க முடியாமல் விஜய் அமைதியாக நின்று விடுகிறார்.

பிறகு காவேரி குடும்பம் ஒரு ரெண்டு நாளைக்கு எங்கே போவது என்று தெரியாமல் இருந்த நிலையில் நவீன் மற்றும் யமுனா வீட்டிற்கு கூப்பிடுகிறார்கள். ஆனால் சாரதா யோசித்து நிலையில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் குழப்பம் ஆகிவிட்டார். பிறகு நவீன் பிடிவாதமாக கூப்பிட்டு வீட்டிற்கு போய்விடுகிறார். அங்கேயும் நவீன் அம்மாவிற்கு இவர்களை கண்டாலே பிடிக்காது.

அதனால் நிச்சயம் காவிரி மற்றும் குடும்பத்தை அவமானப்படுத்தும் விதமாக நோகடித்து பேச போகிறார். ஆனாலும் நவீன் அந்த மாதிரி அவமானம் எதுவும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து கூட்டிட்டு போய்விடுகிறார். அடுத்ததாக விஜய், காவிரியை நினைத்து பீல் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது வெண்ணிலா வந்து விஜய் இடம் பேசுகிறார்.

அதற்கு விஜய், எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது நான் இப்பொழுது உனக்கு உதவி பண்ணுவது ஒரு மனிதாபிமானம் மூலம் தான். ஆனால் தற்போது என்னுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும் பொழுது உன்னை நான் கவனித்துக் கொள்ள முடியாது. உனக்கு சொந்தக்காரங்க யாராவது இருந்தால் சொல்லு நான் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு போய் விடுகிறேன். ஆனால் உனக்கு என்ன தேவையான செலவுகள் இருக்கிறது அதை நான் செய்கிறேன் என்று சொல்கிறார்.

ஆனாலும் இதையெல்லாம் கேட்ட வெண்ணிலா எதுவுமே புரியாதபடி தலையை ஆட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த வகையில் வெண்ணிலாவுக்கு எல்லா ஞாபகமும் வந்துவிட்டது போல தெரிகிறது. இருந்தாலும் காவேரியிடம் இருந்து விஜய பிரித்து தான் வாழ வேண்டும் என்பதற்காக டிராமா போடுவது போல் அப்பட்டமாக தெரிகிறது. இதை புரிந்து கொள்ளாத விஜய், வெண்ணிலா மீது பரிதாபத்துடன் இருக்கிறார்.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைக்கும் ராகினி, வெண்ணிலா முலம் குளறுபடி உண்டாக்குவதற்கு பல சதிகளை போட்டு வருகிறார். இதையெல்லாம் தொடர்ந்து விஜய், தாத்தாவிடம் கொடுக்கும் வாக்கு என்னவென்றால் என்னை வேண்டாம் என்று போன காவிரி குடும்பத்தை நான் சமரசம் செய்து என்னை போல் ஒரு மருமகன் வேண்டும் என்று தேடி வரும் அளவிற்கு நான் செய்து காட்டுவேன் என்று சபதம் இடுகிறார். அந்த வகையில் காவிரி, விஜய் விட்டு தூரமாக போனாலும் விஜய் காவிரியை விட்டு விடமாட்டார்.

Trending News