சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

டாடா கவின் உடன் தல.. பக்கத்துல இந்த டைரக்டரா? வைரல் புகைப்படம்

Kavin : சினிமாவில் உள்ள பலர் அஜித்தின் தீவிர ரசிகராக இருந்து வருகின்றனர். அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்து விட வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. அவ்வாறு டாடா கவினிக்கு இன்று அஜித்தை பார்க்கும் அதிர்ஷ்டம் அளித்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் போல் சின்னத்திரையில் இருந்த வெள்ளி திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் கவின். சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான இவருக்கு டாடா படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. லிப்ட், ஸ்டார் எனத் தொடர்ந்து வெற்றியை கொடுத்து வருகிறார்.

இப்போது அவரது பிளடி பக்கர் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் அவரது வித்தியாசமான தோற்றம் படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இந்நிலையில் கவின் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

டாடா கவின் உடன் தல அஜித்

kavin
kavin

ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்ற போது அஜித்தை சந்தித்துள்ளார் போல தெரிகிறது. மேலும் அவரது பக்கத்தில் இயக்குனர் நெல்சன் இருக்கிறார். பீஸ்ட், ஜெயிலர் வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து ஜெயிலர் 2 படத்தை எடுக்க இருக்கிறார்.

அஜித்தை அணைத்தபடி இயக்குனர் நெல்சன்

nelson-ajith
nelson-ajith

இதற்கான கதையையும் தயார் செய்து வருகிறார். இந்த சூழலில் கவின், சிவகார்த்திகேயன், நெல்சன் போன்றோர் விஜய் டிவியிலிருந்து வந்தவர்கள் தான். ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் நண்பர்களாக பழகி வந்ததால் வெளியில் ஒன்றாக அடிக்கடி செல்வது வழக்கம்.

அவ்வாறு கவின் மற்றும் நெல்சன் இருவரும் வெளியில் செல்லும்போது எதர்ச்சையாக அஜித்தையும் சந்தித்துள்ளனர். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் இது. இந்நிலையில் ட்விட்டரில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இந்த புகைப்படங்கள் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.

மார்க்கெட்டை பிடிக்கும் கவின்

Trending News