வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கவின் காட்டில் அடை மழை.. தொடர்ந்து ஹிட் பட இயக்குனர்களுடன் கூட்டணி.. அடுத்து யார் படத்தில் தெரியுமா?


பிரபல ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் கவின் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் தொடரில் நடிகராக அறிமுகமாகி, அடுத்து, சரவணன் மீனாட்சி, தாயுமானவன் உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் கவின். அதன்பின், பீட்சா, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்த அவர், 2017 ஆம் ஆண்டு சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாப்பாத்திரல் நடித்தார். அதேபோல் ’நப்புன்னா என்னான்னு தெரியுமா’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன்பின், விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவரை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்ந்தது. அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உருவாகினர். அவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவும் அந்த நிகழ்ச்சி அவருக்கு கை கொடுத்தது.

இதையடுத்து, லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் அவர் மணிகண்டன் இயக்கத்தில் நடித்த ’டாடா’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இப்படம் அமைந்தது நிலையில் கவினுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தீபாவளிக்கு ரிலீசாகும் ப்ளடி பக்கர்

அந்த வகையில், நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில், சிவபாலன் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ள படம் ப்ளடி பக்கர். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது. இப்படத்தின் டீசர், பாடல்கள் எல்லாம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பிச்சைக்கார வேடத்தில் நடித்துள்ள கவினுக்கு இப்படம் வெற்றிப் படமாக அமையும் என தெரிகிறது.

இதையடுத்து, கவின் நடித்து வரும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். லலித்குமார் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஹாய் என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இதையடுத்து கிஸ், மாஸ்க் ஆகிய படங்களில் அவர் நடிக்கவுள்ளார்.

சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் கவின் கூட்டணி

மேலும், தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் கவனம் செலுத்தி வரும் கவின், சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை, பத்து தல ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கிருஷ்ணாவின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், கடைசியாக கவின் இதில் நடிக்க சம்மதித்துள்ளார்.

தற்போது நடித்து வரும் படங்கள், கமிட்டாகியுள்ள படங்களை முடித்துவிட்டு கவின், கிருஷ்ணாவின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகிறது. தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் கவினை புக் செய்து வருவதால் அவரது அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்களுக்கும் சினிமா விமர்சகர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Krishna

Trending News