வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கல்யாணம் ஆகாமலே அப்பாவான கவின்.. அனல் பறக்க வெளிவந்த டாடா பட திரைவிமர்சனம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சீரியல் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் டாடா திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.

அப்பா, மகன் இடையே இருக்கும் பாச பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை பார்த்த பலரும் கவினின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இதில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரையும் காதலர்களாக காண்பிக்கின்றனர். அதன் பின் திருமணத்திற்கு முன்பே ஹீரோயின் கர்ப்பம் ஆகிறார்.

Also Read: ஒரு நல்ல டர்னிங் பாயிண்டுக்காக காத்திருக்கும் 5 இளம் நடிகர்கள்.. ஜெய் பீம்மோட நிற்கும் மணிகண்டன்

இது இருவரின் வீட்டிற்கும் தெரிந்ததும் இருவரையும் வீட்டிலும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். பிறகு அந்த குழந்தையை கலைத்து விடலாம் என கவின் சொல்ல, அதைத் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கதாநாயகி குழந்தையை பெற்றுக் கொள்வதில் உறுதியுடன் இருக்கிறார்.

ஆனால் சில நாட்களில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, குழந்தை பிறப்பதற்கு முன்பே இருவரும் பிரிந்து விடுகின்றனர். இதன் பிறகு என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் முழு கதை. படத்தில் நிறைய இடங்களில் சீரியஸாக இருந்த காட்சிகளை கூட காமெடிகளை சேர்த்து இன்ட்ரஸ்டிங்காக கொடுத்திருந்தனர்.

Also Read: அடுத்த கவின், லாஸ்லியா இவங்கதான்.. புருஷன், பொண்டாட்டியா தான் வெளியில போவாங்க போல

அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கும் நடிகர்கள் கூட மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்பதை படம் பார்ப்போரே தீர்மானிக்கும் வகையில் இந்த படத்தை எடுத்தது தான் படத்தின் மைனஸ் பாயிண்டாக தெரிந்தது.

இருப்பினும் அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார் என்று தான் சொல்லணும். படத்தின் நிறைய இடங்களில் நெஞ்சை நக்கிய டாடா படத்தை தியேட்டருக்கு சென்று ஒரு முறை தாராளமாக பார்க்கலாம். அது மட்டுமல்லாமல் கடந்த வருடத்தில் வெளியான லவ் டுடே எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ அதேபோன்று இப்படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: டாடா கவினுக்கு வெற்றியா, தோல்வியா.? அனல் பறக்கும் பிரிவியூ ஷோ விமர்சனம்

Trending News