புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சென்ற இடமெல்லாம் ஏழரை இழுக்கும் கவின்.. ஜிம் பாய்ஸ் பவுன்சர்களையே மிரள விட்ட டாடா

Kavin: பொதுவாக ஒருவருக்கு கொஞ்சம் பேரும் புகழும் வந்துவிட்டால் அதனுடன் சேர்ந்து திமிரும் தெனாவட்டும் வந்துவிடும் போல. அப்படித்தான் நடிகர் கவின் நடித்த இரண்டு படங்கள் ஹிட்டானதும், வானத்துக்கும் பூமிக்கும் குதித்து ஓவர் அலப்பறையை காட்டி வருகிறார்.

அத்துடன் தற்போது இவரைப் பற்றி வரும் விஷயங்கள் அனைத்தும் படப்பிடிப்புக்கு ஒழுங்காக போவதில்லை. போனாலும் லேட்டாக போய்விட்டு சீக்கிரத்திலேயே வீட்டுக்கு கிளம்பி விடுகிறாராம். இதுல வேற அதிக சம்பளம் வேண்டும் என்று டிமாண்ட் பண்ணி டீல் பேசி வரும் அளவிற்கு அதம்பல் பண்ணிக்கிட்டு வருவதாக பல விஷயங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இதோடு சேர்த்து தற்போது இன்னொரு விஷயமும் கசிந்திருக்கிறது. அதாவது தற்போது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த பிரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஓவர் ஆட்டம் போடும் கவின்

இந்த சூழலில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக கவின் கிட்டத்தட்ட ஐந்து பவுன்சர்களுடன் போயிருக்கிறார். போன இடத்தில் ரசிகர்கள் கவினை பார்த்துடன் செல்பி எடுக்க அலை மோதி இருக்கிறார்கள். அந்த நேரத்தில் பவுன்சர்கள் எதுவும் சொல்லாமல் போட்டோ எடுக்க அனுமதி கொடுத்து விட்டார்கள்.

இதனை பார்த்த கவின் அந்த பவுன்சர்கள் அனைவரையும் கூப்பிட்டு லெப்ட் அண்ட் ரைட் கொடுத்து திட்டி இருக்கிறார். இதோடு போகாமல் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரிடமும் சண்டை போட்டிருக்கிறார். பொதுவாக எல்லா ஹீரோக்களும் ஸ்டண்ட் மாஸ்டர் என்றால் அவர்களின் கால்களில் விழுந்து தொட்டு வணங்குவார்கள்.

ஆனால் கவின், ஸ்டண்ட் மாஸ்டரிடம் சண்டை போட்டு சூட்டிங் போன இடத்தில் ஏழரை இழுத்திருக்கிறார். இப்படி போன இடத்தில் எல்லாம் பிரச்சனை பண்ணிக் கொண்டிருந்தால் எப்படி இவரால் தொடர்ந்து பட வாய்ப்பை பெற முடியும் என்ற நினைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் தான் ஆட்டம் போட்டு வருகிறார்.

இப்படித்தான் சில ஹீரோக்கள் ஓவராக ஆட்டம் போட்டதால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்கள். இந்த லிஸ்டில் கவினும் இடம்பெறாமல் இருந்தால் சந்தோசம் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் இவரை பற்றி தாறுமாறான கருத்துக்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Trending News