புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Star Movie Collection : 3 நாட்களில் வசூலை வாரி குவித்த ஸ்டார்.. அதிரடியாக சம்பளத்தை ஏற்றிய கவின்

கவினின் டாடா மற்றும் லிப்ட் வரிசையில் இப்போது ஸ்டார் படமும் இணைந்திருக்கிறது. ஏனென்றால் தொடர்ந்து வெற்றி படங்களை கவின் கொடுத்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான ஸ்டார் படமும் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.

இளன் இயக்கத்தில் உருவான ஸ்டார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் நேர்மையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் வசூலும் எதிர்பார்த்த அளவு வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் முதல் நாள் ஸ்டார் படம் 2.8 கோடி வசூல் செய்திருந்தது. சனிக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் 4 கோடி வசூல் செய்தது. ஞாயிற்றுக்கிழமையும் வசூலில் எந்த மாற்றமும் இல்லாமல் கிட்டத்தட்ட 4 கோடி கலெக்ஷனை அள்ளி இருக்கிறது.

மூன்று நாட்களில் ஸ்டார் படத்தின் கலெக்ஷன்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 10.8 கோடி வசூல் செய்திருக்கிறது. உலகம் முழுவதும் மூன்றே நாட்களில் கிட்டத்தட்ட 15 கோடி வசூல் செய்திருக்கிறது. வளர்ந்து வரும் நடிகரான கவின் படம் இவ்வளவு வசூலை குவித்தது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தனது சம்பளத்தையும் கவின் உயர்த்தி இருக்கிறார். முந்தைய படங்களில் 40 லட்சம் வரை சம்பளம் வாங்கி கவின், ஸ்டார் படத்திற்கு 2 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். இந்த படம் இப்போது வெற்றி அடைந்துள்ளதால் அவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது.

ஆகையால் அடுத்த படத்தில் அவருடைய சம்பளம் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. கவின் தொடர்ந்து வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நிலையில் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். கண்டிப்பாக சிவகார்த்திகேயன் அளவுக்கு தமிழ் சினிமாவில் கவின் முக்கிய இடத்தை பிடிப்பார்.

Trending News