வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த கவின்.. பாராட்டிய பிரபலங்கள்

Kavin : சின்னத்திரையில் இருந்து வந்த கவின் டாடா, லிப்ட் படங்களின் வெற்றியை தொடர்ந்து நடித்திருக்கும் படம் தான் ஸ்டார். இளம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதிதி போங்ஹர், லால் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மொத்த சினிமாவும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் கவின். அதாவது அஜித்தின் முகவரி மற்றும் விஜயின் துள்ளாத மனம் துள்ளும் போன்ற படங்களின் சாயலில் தான் ஸ்டார் படமும் உருவாகி இருக்கிறது.

ஒரு இலக்கை நோக்கி செல்லும் போது என்னென்ன பிரச்சனையை சந்திக்கிறார் என்பதை வேதனையுடன் சொல்லி இருக்கிறது ஸ்டார் படம். அதாவது சிறு வயதில் இருந்தே நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் கவின்.

ஸ்டார் ட்ரெய்லரை பாராட்டிய கௌதம் மேனன்

ஆனால் கவின் ஹீரோவாக என்னென்ன விஷயங்கள் தடையாக அமைகிறது என்பதை வலி வேதனையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர். அதிலும் இந்த போஸ்டரில் பள்ளி படிக்கும் வயதிலிருந்து 30 வயது தாண்டிய வரை தனது தோற்றத்தின் மூலமே வித்தியாசம் காட்டி இருக்கிறார் கவின்.

மேலும் ஸ்டார் ட்ரெய்லரிலேயே கவின் நடிப்பை பார்த்து பலரும் மிரண்டு விட்டனர். மேலும் இதைப் பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் ஸ்டார் படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கௌதம் வாசுதேவ் மேனன் டெய்லரைப் பார்த்த அனுபவத்தை கூறியிருக்கிறார்.

மேலும் இது பிரமோஷனுக்காக செய்யவில்லை, தான் மனமார்ந்த உணர்ந்த விஷயங்களை பகிர்ந்து உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் இயக்குனர் நெல்சன் திலிப் குமாரும் மிகவும் புத்திசாலித்தனமாக டிரைலரைக் கையாண்டு உள்ளார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் ரசிகர்கள் கவினின் ஸ்டார் படத்தின் ரிலீஸுகாக பெரிதும் காத்திருக்கிறார்கள். கண்டிப்பாக இந்த படம் அவரது கேரியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது.

Trending News