செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஹாலிவுட் பட கதையில் உருவாகும் கவினின் டாடா பட போஸ்டர்.. கைப்பிடித்து தூக்கிவிடும் பா.ரஞ்சித்

விஜய் டிவியின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான கவின் தற்போது பெரிய திரையிலும் பிரபலமாகி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதைதொடர்ந்து அவர் தற்போது ஊர்க்குருவி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகி வந்த டாடா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். கவினின் மாறுபட்ட தோற்றத்தில் வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் கவின் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு கூட்ட நெரிசலில் மிகவும் பரிதாபமாக நிற்பதுபோல் இருக்கிறது. இதை பார்க்கும் போது கவின் இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடிக்கிறார் என்று தெரிகிறது. மேலும் சோகமே உருவாக அவர் தன்னந்தனியே நிற்கும் இந்த போட்டோ ஹாலிவுட் திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் வெளியான பர்சூட் ஆப் ஹேப்பினஸ் என்ற திரைப்படம் பல விருதுகளை வாங்கி குவித்தது. மனைவியை பிரிந்து ஒரு குழந்தையுடன் வாழும் ஹீரோ தன் வாழ்வில் என்ன மாதிரியான கஷ்டங்களை சந்திக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

இதில் ஹீரோ தன் குழந்தையை வைத்துக்கொண்டு ரயில்வே டாய்லட், பிளாட்பார்ம் உள்ளிட்ட பல இடங்களில் தங்குவது போன்ற காட்சிகள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படி பலரையும் கவர்ந்த இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

dada
dada

இப்போது கவினின் இந்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது இந்த ஹாலிவுட் திரைப்படத்தின் கதை போல்தான் இப்படமும் எடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. தற்போது வெளியாகி இருக்கும் இப்பட போஸ்டருக்கு ரசிகர்கள் உட்பட அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News