கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, பிக் பாஸ் என அடுத்தடுத்து சின்னத்திரையில் இருந்து இன்று வெள்ளித்திரைக்கு வந்தவர் கவின். இவர் நடித்த படங்களுக்கு மினிமம் கேரண்டி கிடைப்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.
டாடா, லிப்ட், ஸ்டார் என இவர் நடித்த படங்கள் ஓரளவுக்கு விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நன்றாக சென்றது. இதனால் இப்பொழுது இவர் கையில் மூன்று நான்கு படங்கள் இருக்கிறது. இதில் பிளடி பக்கர், கிஸ் என்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டே வருகிறது.
இப்படி ஓரளவு நிதானமாக போய்க் கொண்டிருந்த நடிகர் கவின் திடீரென ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருகிறார். தலைக்கனம் பிடித்து தறிகெட்டு திரிகிறார். பெரிய ஆளா ஆயிட்டோம், நமக்கு ஸ்டார் அந்தஸ்து கிடைத்துவிட்டது என சூட்டிங் ஸ்பாட்டில் யாரையும் மதிப்பதில்லையாம்.
அவமானப்பட்ட சாண்டி மாஸ்டர், வெற்றி மாறன்
சமீபத்தில் இவர் நடித்த படத்தில் டான்ஸ் கோரியோகிராபர் சாண்டி மாஸ்டர் ரெடியாகி கொண்டிருந்தாராம். அப்பொழுது கவின் நீங்கள் இதற்கு வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தனியாக செயல்பட தொடங்கி விட்டாராம். கடைசியில் அந்த பாடல் காட்சி சாண்டி மாஸ்டர் இல்லாமல் பெரிதும் சொதப்பிவிட்டதாம்.
இதே போல் கவின் வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை இயக்குபவர் புதுமுக இயக்குனர் விகரன் அசோக். இவர் தருமி என்ற குறும்படம் இயக்கி கோல்டு மெடல் வாங்கியுள்ளார். இவரை சூட்டிங் ஸ்பாட் என்று கூட பாராமல் “என்னடா ஷார்ட் வைக்கிறாய்” என்று கெட்ட வார்த்தை போட்டு திட்டி விட்டாராம்.
- பொன்னியின் செல்வன் நாயகன்களுடன் மோதும் கவின்
- ரிலீசுக்கு முன்பே கோடிகளில் வியாபாரமான பிளடி பெக்கர்
- சூர்யா-ஜோ முதல் விக்கி-நயன் வரை