சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சினிமா ஆசையில் பித்து பிடித்த கவின்.. ஸ்கோர் செய்யுமா ஸ்டார் டிரைலர்.?

Kavin : சிவகார்த்திகேயன் போல் சின்னதிரையில் இருந்து வெள்ளிதிரைக்கு வந்த கவின் தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவ்வாறு கவின் டாடா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்போது கவினின் நடிப்பில் ஸ்டார் படம் உருவாகி இருக்கிறது. வருகின்ற மே 10 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இப்போது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.

தந்தையின் உத்வேகத்தால் சின்ன வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் கொள்கிறார் கவின். அதுவும் பள்ளி படிக்கும் போதே பாரதியார் போன்ற சில தலைவர்களின் வேஷம் போட்டு மேடையில் நடிக்கிறார். இதனால் படிப்பில் கோட்டை விடுவதால் அவர் அம்மாவிடம் திட்டு வாங்குகிறார்.

கவினின் ஸ்டார் டிரைலர்

ஒரு வழியாக சினிமா வாய்ப்புக்காக வெளியூர் வந்து விடுகிறார் கவின். ஆனால் அங்கு நடக்கும் சினிமா அரசியல் இவரை ஹீரோவாக்க முடியாமல் பல சித்திரவதைக்கு உள்ளாக்குகிறது. இதனால் கவினின் காதலும் பலிக்காமல் போய்விடுகிறது.

பணம் இல்லாமல் தள்ளாடும் கவின் கடைசியில் பிச்சைக்காரனிடம் பணம் வாங்கும் காட்சி ரணமாக்கிறது. இவ்வாறு ரசிகர்களின் மனதை பாதிக்கும்படி நிறைய காட்சிகள் ஸ்டார் படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

டாடா படத்திற்குப் பிறகு கவின் இந்த படத்திற்காக 100% உழைப்பை போட்டு இருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. கண்டிப்பாக ஸ்டார் படம் கவினுக்கு ஸ்கோர் கொடுக்கும்.

Trending News