Kavin: 5 படத்தின் சீனை பிட்டு பிட்டாக எடுத்து உருவாக்கிய கவினின் ஸ்டார்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

People Star Kavin: விஜய் மற்றும் அஜித்திற்கு அடுத்தபடியாக வருகிற தலைமுறைக்கு யுத்தம் ஆரம்பித்து விட்டது என்று சொல்லும் அளவிற்கு கவினின் பெர்பார்மன்ஸ் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக இருக்கிறது. நடிச்சது மூன்று படமனாலும் அதை மறக்க முடியாத அளவிற்கு மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்றால் கண்டிப்பாக சினிமாவில் இவருக்கென்று ஒரு இடத்தை பிடிக்காமல் போக மாட்டார்.

அந்த வகையில் இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் யுவன் மியூசிக்கில் இரு தினங்களுக்கு முன் வெளிவந்த ஸ்டார் படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது. தொடர்ந்து இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து கவினை கொண்டாடும் வகையில் மக்கள் ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

ஆனாலும் ஸ்டார் படத்தில் மிகவும் எளிதாக கவனிக்க கூடிய சில விஷயங்கள் அமைந்திருக்கிறது. அதாவது இப்படத்தை பார்க்கும் பொழுது புதுமையாக எந்த ஒரு விஷயத்தையும் கொண்டு வந்ததாக தெரியவில்லை. அதே மாதிரி இப்படத்தை பார்க்கும் பொழுது பல படங்களின் கலவையாகத்தான் பார்ப்போர்களுக்கு ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.

கவினுக்கு கிடைத்த பட்டம்

ஆரம்பக்காட்சியில் கவினின் கல்லூரி வாழ்க்கையை காட்டும் பொழுது அதில் வரும் பாடல்களும் சரி, டயலாக், சண்டை காட்சிகள் என அனைத்துமே வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவை பார்ப்பது போலவே எல்லா சீனும் அமைந்திருக்கும். அத்துடன் கவினுக்கு ஏற்பட்ட விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கும் பொழுது அவர் கண்ணாடி முன்னே நின் பார்க்கும் பொழுது அன்பே சிவம் படத்தில் கமலை கொண்டு வந்தது போல் பிரதிபலித்திருக்கும்.

இதனை தொடர்ந்து இடைவெளிக்கு முன் வந்த ஹீரோயின் கவினை உயிருக்கு உயிராக காதலித்து வந்திருப்பார். பிறகு கவினுக்கு அடிபட்டதால் ரொம்பவே துவண்டு போயி எதிலும் கவனம் செலுத்த முடியாமல் நடிப்பை கைவிடாமல் இருக்கும் ஒரு கவின் எனக்கு தேவை இல்லை என்று வேறொரு கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிவிடுவார்.

அதன்பின் கவினுக்கே தெரியாமல் சுரபி கல்லூரி படிக்கும் பொழுது காதலித்து இருப்பார். பிறகு கவினின் காதல் பிரேக்கப் ஆனதால் சுரபி கவினை தேடி போய் கல்யாணம் செய்து லட்சத்திற்கு உறுதுணையாக இருப்பார். இந்த காட்சி எல்லாம் பார்க்கும் பொழுது ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தை ஞாபகப்படுத்துகிறது.

இதனைத் தொடர்ந்து கவினின் இலட்சியத்திற்காக ஒட்டுமொத்த குடும்பமும் உறுதுணையாக இருக்கும். அதனால் கவின் வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்தாமல் கடைசிவரை நடிப்பை மட்டும் தேடிக் கொண்டு அலைவார். இதை பார்க்கும் பொழுது அஜித் நடிப்பில் வெளிவந்த முகவரி படத்தை பிட் அடித்தது போல் தெரிந்தது. ஏனென்றால் அதிலும் அஜித் மியூசிக் சான்ஸ்காக கடைசிவரை அலைந்து கொண்டு திரிவார்.

கடைசியாக கவின் அந்த குழந்தையை வாங்கியதும் கையில் வைத்து பார்க்கும் பொழுது டாடா படத்தை ஞாபகப்படுத்துகிறது. இப்படி ஸ்டார் படத்தை பார்க்கும் பொழுது ஒவ்வொரு காட்சியையும் மற்ற படங்களை பார்த்த ஞாபகம் போல் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் கிளைமாக்ஸ் காட்சியில் ஆஸ்பத்திரியில் வந்த கவின் முகத்தில் அந்த தழும்பு எதுவும் இல்லாததால் கொஞ்சம் குழப்பத்திலேயே கதை நகர்ந்தது போல் இருந்தது.

ஆனால் கடைசியில் அங்கு தான் ஒரு ட்விஸ்ட் என்று சொல்வது போல் அது வெற்றிமாறன் கவனுக்காக கொடுத்த திரைப்படத்திற்கான சான்ஸ் என்று புரிந்தது. இப்படத்தை ஒரு கதையாக பார்க்காமல் கவின் நடிப்பு திறமையை பாராட்டும் வகையில் எழுதி வைத்த திரைக்கதை போல் அமைந்திருக்கிறது. பொதுவாக இந்த மாதிரி விஜய், ரஜினி போன்ற முன்னணி ஹீரோகளுக்கு தான் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் அது கவினுக்கு மூன்றாவது படத்திலேயே அமைந்திருக்கிறது என்றால் கண்டிப்பாக மிகப் பெரிய ஸ்டார் ஆக வளர்ந்து வருவார். அதனால் தான் மக்கள் கவினுக்கு people star kavin என்ற பட்டத்தையும் கொடுத்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஊக்குவித்திருக்கிறார்கள்.

Next Story

- Advertisement -