வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கயல் குடும்பத்துடன் சம்பந்தம் பண்ண போகும் ராஜி.. உறவாடி கெடுக்க பிளான் பண்ணிய சதிகாரி அத்தை

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில் கயல், அப்பா சொந்தக்காரர்களுடன் எந்த காரணத்தை கொண்டும் தன் வீட்டோட கௌரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று சுயமரியாதை உடன் போராடி வருகிறார். அந்த வகையில் பல இடைஞ்சல்களை பெரியப்பா கொடுத்தாலும் அதையெல்லாம் அசால்டாக தட்டி விட்டு தற்போது ஒரு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறார்.

இதற்கிடையில் குடும்பத்துக்காக காதல் கல்யாணம் எல்லாத்தையும் வேண்டாம் என்று முடிவு பண்ணிய கயல், எழிலின் அன்பையும் காதலையும் புரிந்து கொண்டு தற்போது நிச்சயதார்த்தம் வரை வந்து இருக்கிறது. ஆனால் இப்பொழுது புதிதாக முளைத்திருக்கும் எதிரியாக அத்தை குடும்பத்தை காட்டி இருக்கிறார்கள்.

கயல் தங்கச்சியுடன் மகனுக்கு முடிச்சு போட நினைக்கும் ராஜி

இதில் ராஜி வந்ததிலிருந்தே கயலுடன் மோதும் வகையில் பல சந்தர்ப்பங்கள் அமைந்து விடுகிறது. இதனால் அத்தை என்று தெரிந்த பின்பும் கயல் ராஜியுடன் ஒத்துப் போகவில்லை. அடிக்கடி மோதிக் கொள்ளும் அளவிற்கு ஏதாவது பிரச்சனையில் இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். போதாக்குறைக்கு பெரியப்பா ராஜியை தன் கைவசம் வைத்துக்கொண்டு கயல் குடும்பத்திற்கு எதிராக சதி வேலைகளை செய்ய பிளான் பண்ணி இருக்கிறார்.

அந்த வகையில் கயல் நிச்சயதார்த்தத்தை நடக்க விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக ராஜியை பகடைக்காயாக பயன்படுத்துகிறார். இது தெரியாமல் ராஜியும் கயல் மீது கோபத்தில் இருக்கிறார். இவர்களுக்கிடையில் கயல் அம்மா மாட்டிக்கொண்டு முழிக்கிறார். எப்படியாவது தன் மகள் ஆசைப்பட்டபடி கல்யாணம் நடந்துவிட வேண்டும் என்பதற்காக ராஜி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

இதை தெரிந்து கொண்ட கயல் அம்மாவிடம் சண்டை போடுகிறார். தன்னுடைய குடும்பத்திற்காக தான் நான் இவ்வளவு பாடுபடுகிறேன். அது தெரியாமல் உன் மரியாதையை இழக்கும் படி நீ ஏன் நடந்து கொள்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு கயல் அம்மா நீ நம்முடைய சொந்தக்காரங்களுடன் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி தான் போகணும்.

அவர்களுடைய உறவு நமக்கு தேவை. அதை புரிந்து நீ கோபப்படாமல் அனுசரையாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுக்கிறார். இதனால் மௌனம் காத்துக் கொண்டிருக்கும் கயல், இதுவரை பெரியப்பா குடும்பத்தை சமாளித்து வந்த நமக்கு தற்போது ராஜி அத்தையும் எப்படி சமாளிப்பது என்று பெரிய குழப்பத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் கயல் அம்மா கேட்டுக்கொண்டபடி நிச்சயதார்த்தத்தை நடத்துவதற்கு ஊர் தர்மகத்தாவிடம் ராஜி பேசுகிறார்.

இதை பார்த்த கயல் இவங்க தயவில் நம்முடைய நிச்சயதார்த்தம் நடக்கவா? என்ற எண்ணத்தில் நிற்கிறார். அந்த வகையில் இவர்களுடைய சண்டை பரம எதிரிகளாக கீரியும் பாம்புமாக தொடர்ந்து கொண்டே போகப்போகிறது. பின்பு கயலின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதற்காக ராஜி கயல் குடும்பத்துடன் சம்பந்தம் வைக்கப் போகிறார். அந்த வகையில் ராஜி மகனை கயலின் தங்கைக்கு பேசி முடித்து உறவாடி கெடுக்கும் வகையில் சதித்திட்டம் போடப் போகிறார்.

Trending News