புதன்கிழமை, நவம்பர் 27, 2024

எழில் அம்மாவுடன் நேருக்கு நேர் சவால் விட்ட கயல்.. மறைமுகமாக சிவசங்கரி செய்ய போகும் நாரதர் வேலை

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், கயல் மற்றும் எழில் ஆசைப்பட்ட மாதிரி இருவருக்கும் திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டது. ஆனால் மூர்த்தி கத்திக்குத்துப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற விஷயம் கயலுக்கு தெரிந்தவுடன் மூர்த்தி பக்கத்திலேயே இருந்து கவனித்துக் கொள்ள கயல் ஆசைப்பட்டார்.

ஆனால் மூர்த்தி இதற்குப் பிறகு நடக்கும் சம்பிரதாயங்கள் அனைத்தும் தடைப்பட்டு விடக்கூடாது, எனக்கு எதுவும் ஆகாது நீ வீட்டுக்கு போ என்று கயலை அனுப்பி வைத்து விட்டார். எழிலுடன் மாமியார் வீட்டுக்கு போன கயலுக்கு இனிமேல் தான் பிரச்சனை அடுக்கடுக்காக வரப்போகிறது என்பதற்கு ஏற்ப மொத்த பகையும் தீர்க்கும் விதமாக சிவசங்கரி, எழில் மற்றும் கயலுக்கு இடையே சண்டை மூட்டி விட்டு பிரிப்பதற்கு நாரதர் வேலைக்கு தயாராகி விட்டார்.

அந்த வகையில் சிவசங்கரி, தீபிகாவின் அப்பாவிற்கு ஃபோன் பண்ணி இன்னும் ஒரு மாதத்திற்குள்ளேயே என் மகனிடம் இருந்து கயலைப் பிரித்துக் காட்டுகிறேன். அதன்பிறகு நாம் ஆசைப்பட்ட மாதிரி எழிலுடன் தீபிகாவை சேர்த்து வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

அதனால் ஒரு நல்ல மாமியார் போல கயலுக்கு பக்கத்திலேயே இருந்து எழிலை நம்ப வைத்து ஏதோ ஒரு கலகத்தை மூட்டி எழில் மனதில் கயலை வெறுக்கும்படி சிவசங்கரி நாடகத்தை அரங்கேற்றப் போகிறார். இதுவரை கயலுக்கும் எழிலுக்கும் வராத பிரச்சனை இனிமேல் சிவசங்கரியால் வந்துவிடும்.

ஏனென்றால் சிவசங்கரி எப்படிப்பட்டவர் இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு என்னெல்லாம் பண்ணியிருக்கிறார் என்ற விஷயம் கயலுக்கு மட்டும்தான் தெரியும். எழிலுக்கு தெரியாததால் தன் அம்மா போல் இந்த உலகத்தில் நல்லவர் யாருமில்லை என்பதற்கு ஏற்ப மொத்தமாக சிவசங்கரியை கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு வருகிறார்.

இதை பயன்படுத்தியே சிவசங்கரி நாடகத்தை அரங்கேற்ற போகிறார். அந்த வகையில் வரப்போகிற பிரச்சினையையும் புகுந்த வீட்டில் ஏற்பட போகும் கலவரத்தையும் கயல் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை காட்டும் விதமாக இனி அடுத்து வரும் ஒவ்வொரு காட்சிகளும் விறுவிறுப்பாக இருக்கப் போகிறது.

இதனை அடுத்து தன்னுடைய அண்ணன் மூர்த்தியின் நிலைமைக்கு தன் மாமியார் சிவசங்கரி தான் காரணமாக இருப்பார் என்று கயலுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. அந்த வகையில் நேரடியாக சிவசங்கரிடம் எங்க அண்ணன் நிலைமைக்கு நீங்கதான் காரணமாக இருப்பீங்க என்று எனக்கு தோணுது.

ஆனால் அது மட்டும் உறுதியாகிவிட்டது என்றால் நான் என்ன பண்ணுவேன், நீங்க என்ன நிலைமைக்கு போவீங்க என்று என்னால் எதையும் சொல்ல முடியாது என்று சவால் விடும் அளவிற்கு கயல் அதிரடியாக பேசி விட்டார். அடுத்ததாக மூர்த்தி, மருத்துவமனையில் கொஞ்சம் சரியாகி விட்டதால் டாக்டரிடம் என்ன டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்.

என் தங்கைக்கு ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து நான் அடுத்து எல்லா விஷயங்களையும் செய்யணும் என்று ஆசைப்படுகிறேன் என கேட்கிறார். அதன்படி மூர்த்தி எந்த வித பிரச்சினையும் இல்லாமல் வீட்டிற்கு வந்து விடுவார். ஆனால் கயலின் குடும்பத்தை வைத்தே காய் நகர்த்தலாம் என சிவசங்கரி திட்டம் போட்டிருக்கிறார். இதில் யார் பலியாடாக சிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News