Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியல் ஆரம்பத்தில் ஆஹோ ஓஹோ என்று மக்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆனால் போகப் போக கதையே இல்லாமல் அரைத்த மாவை அரைத்துக் கொண்டு பிரச்சனைகளை அதிகமாக காட்டி வருவதால் மக்களுக்கு போரடித்து விட்டது. இதனால் ஆரம்பத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் ஜொலித்த கயல் சீரியல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைவை சந்தித்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
ஆனாலும் இந்த வருட சன் குடும்ப விருதுகள் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெண்டு விருதை தட்டி இருக்கிறது. அதில் சிறந்த சீரியல் என்ற விருதையும் சிறந்த நடிகை என்கிற விருதும் கயல் சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்னும் கூடிய விரைவில் கயல் சீரியல் முடிவுக்கு வரப் போகிறது. அந்த வகையில் சில விஷயங்கள் உடனே வெளியே தெரியும்படி காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது தேவியை கடத்தினது செங்குட்டுவன் என்று ஒட்டுமொத்த குடும்பமும் நினைக்கிறார்கள். கயல், செங்குட்டுவன் தான் தேவியை கடத்தி கொலை முயற்சி பண்ணி இருக்கிறார் என்று தெரிந்தால் நான் அவனை சும்மா விட மாட்டேன். நிச்சயம் அவன் பண்ணிய தவறுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று சொல்கிறார். ஆனால் தேவியை கடத்தி கொலை செய்யும் அளவிற்கு போனதற்கு பெரியப்பாவின் மகன் சுப்ரமணி தான் என்ற உண்மை பெரியப்பாவுக்கு தெரிந்து விட்டது.
உடனே வீட்டிற்கு வந்த பெரியப்பா, மகனை அடித்து கொலை செய்யும் அளவிற்கு இவன் துணிந்து இருக்கிறான். இவன் தான் தேவியை கடத்தி கொலை செய்ய பார்த்தான் என்று அனைவரிடமும் சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியான வடிவு தன் மகனுக்கு ஓவராக செல்லம் கொடுத்து கெடுத்து விட்டோமோ என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். இதோடு மட்டும் நிறுத்தாமல் பெரியப்பா இந்த உண்மையை நான் கயலிடம் சொல்லியே தீர்வேன் என்று முடிவு பண்ணப் போகிறார்.
ஆனால் வடிவு, கயலிடம் எந்த உண்மையையும் சொல்லக்கூடாது என்று சொல்லி பெரியப்பாவை தடுக்கிறார். அதனால் பெரியப்பாவுக்கு வேறு வழியில்லாமல் வடிவு சொன்னபடி கயலிடம் இருந்து உண்மையை மறைக்கப் போகிறார். இதற்கிடையில் சரவணவேல், அவருடைய உயிரை பனையம் வைத்து தான் தேவியை காப்பாற்றி இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அந்த வகையில் சரவணவேலு கேரக்டரும் பாசிட்டிவாக நகர்கிறது.