திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

ஆக்ரோஷமாக மாறிய கயல், உச்சகட்ட சந்தோஷத்தில் எழில்.. பிரச்சனைக்கு ஒரே வார்த்தையில் முடிவு கட்டிய குடும்பம்

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், காத்திருந்து காத்திருந்து பல பிரச்சினைகளைத் தாண்டி எழில் காதலித்த கயலை கரம் பிடித்தார். அதே மாதிரி கயலுக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகளும், குடும்ப பாரங்களையும் சுமந்த சிங்க பெண்ணாக போராடி வந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு எழில் கயல் கல்யாணம் முடிந்த பிறகு இனியாவது இவர்களுடைய வாழ்க்கையில் சந்தோசம் என்பது வந்துவிடும்.

இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கல்யாணம் ஆனாலும் சந்தோசம் மட்டும் எங்களுடைய வாழ்க்கையில் கிடையவே கிடையாது என்பதற்கு ஏற்ப கயல் குடும்பப் பிரச்சினைகளை தலையில் சுமந்து கொண்டு போராடி வருகிறார். இதில் எழிலும், கயலுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக மாமியார் வீட்டு பிரச்சனையை முன்னாடி நின்று சரி செய்ய பார்க்கிறார்.

இப்படி இவர்கள் போராட்டத்தை தொடங்கிய நிலையில் இவர்களுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும் விதமாக வேலு நுழைந்தார். ஆரம்பத்தில் இருந்தே எழிலுக்கு, வேலுவை பிடிக்கவில்லை. ஆனாலும் கயல், வேலுவை நம்பி வீட்டுக்குள் விட்டார். பிறகு வேலு, கயல் மற்றும் எழில் சந்தோசமாக வாழ கூடாது. இவர்கள் இருவரும் பிரிந்து விட வேண்டும் கயல் என்னுடன் வாழ வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை பண்ண ஆரம்பித்து விட்டார்.

இதனை தெரிந்து கொண்ட கயல், ஆக்ரோஷமாக மாறி குடும்பத்தின் முன் நின்று வேலுவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் அளவிற்கு சரியான ஆக்சன் காட்டிவிட்டார். இதுதான் கயல் என்று சொல்லும் அளவிற்கு வேலு பிரச்சினைக்கு முடிவு கட்டி விட்டார். ஆக்ரோஷமாக பொங்கி எழுந்த கயலின் அடாவடித்தனமான பேச்சுக்கு வேலு வாய் அடைத்தது மட்டுமில்லாமல் கயலின் அதிரடியான முடிவை பார்த்த எழில் உச்சகட்ட சந்தோஷத்தை அடைந்து விட்டார்.

ஒரு வழியா வேலு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைத்து விட்டது. இதனை அடுத்து தேவி வளைகாப்பில் தேவியின் கணவரையும் வரவழைத்து சமரசம் செய்ய வேண்டும் என்று கயல் முயற்சி பண்ணுகிறார். இப்படியே ஒவ்வொரு பிரச்சனையும் சரி செய்துவிட்டு அதன் பிறகு தான் எழிலுடன் சந்தோஷமான வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று கயல் முடிவெடுத்துவிட்டார்.

Trending News