செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சிவசங்கரிக்கு கயல் கொடுத்த பதிலடி, குழப்பத்தில் எழில்.. பெரியப்பா செய்யும் சூழ்ச்சியால் சிக்க போகும் ஆனந்தி

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், குடும்பத்திற்காக எதையும் தாங்கும் இரும்பு மனிதராக இருந்த கயல், எழிலின் ஜாதக விஷயம் தெரிந்த பிறகு சுக்கு நூறாக உடைந்து விட்டார். இதனால் எதையோ பறிகொடுத்தது போல் புலம்பித் தவித்த கயல் மறுபடியும் சீறிப்பாயும் சிங்க பெண்ணாக மாறப்போகிறார்.

அதாவது எழிலிடம் எப்படியாவது உண்மையை சொல்லி கல்யாணத்தை தடுத்து நிறுத்தலாம் என்று கயல் முயற்சி எடுத்தார். ஆனால் எழில் அவருக்கு வந்த கெட்ட கனவை கயலிடம் சொல்லி புலம்பிய நிலையில், எழில் தன் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு எதையும் சொல்லாமல் கயல் மறைத்து விட்டார். அப்பொழுது எழில், எந்த காரணத்தைக் கொண்டும் என்னை விட்டு பிரிய மாட்டேன் என்று எனக்கு சத்தியம் பண்ணு என்று கேட்கிறார்.

ஆனந்தி வாழ்க்கையை காப்பாற்ற போராடும் கயல்

வேறு வழி இல்லாமல் கயல் சத்தியம் பண்ணும் பொழுது அங்கே தீபிகா வந்து விடுகிறார். வந்ததும் கயலிடம், எழிலை பற்றி பேசி எங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் நல்லபடியாக நடக்கும் என்று சொல்கிறார். உடனே மூன்று பேரும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்கள். எழில், கயலுடன் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டுகிறார். கயல், எழில் என்னை மறந்து தீபிகாவை கல்யாணம் பண்ணி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

தீபிகா, எழில் கயலை மறந்து தீபிகா தீபிகா என்று என் பின்னாடியே சுற்ற வேண்டும் என்று கடவுளிடம் இப்படி மூன்று பேரும் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த நேரத்தில் சிவசங்கரி, கயலுக்கு போன் பண்ணி என் பையனை விட்டு பிரிய வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது ஏன் இன்னும் அவனுடன் நெருங்கி பழகுகிறாய் என்று திட்டுகிறார்.

அதற்கு கயல், நீங்க கூப்பிட்டு என்னை பயமுறுத்துக்காக நான் எழிலை விட்டு பிரிய நினைக்கலை. எழில் உயிர்க்கு எந்த ஆபத்து வரக்கூடாது என்பதற்காகத்தான் நானே பிரிவதற்கு சம்மதிக்கிறேன். ஆனால் என்னிடம் இந்த உருட்டல் மிரட்டல் வேலையெல்லாம் வச்சுக்காதீங்க என்று சிவசங்கரிக்கு பதிலடி கொடுத்து விடுகிறார். ஆனால் கயல் முன்ன மாதிரி இல்லை என்று ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று எழில் குழப்பத்தில் இருக்கிறார்.

அதனால் அதை சீக்கிரமாக கண்டுபிடித்து கயலை பழைய மாதிரி சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று எழில் ஆசைப்படுகிறார். இந்த சூழ்நிலையில் கயிலின் அத்தை ராஜியின் மகன் ஒரு விபத்தை ஏற்படுத்துகிறார். அதில் அடிபட்டவரை கயில் தம்பி அன்பு தான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்து நடந்த விஷயத்தை கயல் இடம் சொல்கிறார். உடனே கயல் ஆவேசமாக ராஜி வீட்டுக்கு போயி மனோஜை திட்டுகிறார்.

இதனைத் தொடர்ந்து மனோஜ்க்கு கூடிய சீக்கிரத்தை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று ராஜு முடிவெடுக்கிறார். அப்பொழுது இதில் கயலின் பெரியப்பா மூக்கை நுழைத்து ராஜிக்கு ஒரு ஐடியா கொடுக்கிறார். அதாவது அனைவரும் சேர்ந்து கயில் வீட்டிற்கு வருகிறார்கள். அங்கே வந்த பொழுது மனோஜ்க்கு பொண்ணு பார்க்கும் விஷயமாக ராஜி பேசுகிறார். அப்பொழுது வடிவு நீ என் வெளியிலே பொண்ணு தேடுகிறாய் காமாட்சி மகள் ஆனந்தி இருக்காளா, அவளையே கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் ராஜியும் சந்தோஷமாக இருக்கிறார். ஆனால் ராஜி பிளான் என்னவென்றால் கயலை அடக்குவதற்கு ஆனந்தியை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தால் நமக்கு அடிமையாகி விடுவார் என்று நினைக்கிறார். அதே மாதிரி பெரியப்பா பிளான் என்னவென்றால் ஆனந்தி டாக்டர் படிப்பை படிக்க விடாமல் கல்யாணத்தை பண்ணி வைத்து விட்டால் குடும்பம் நமக்கு கீழே அடிமையாகிவிடும் என்று நினைக்கிறார்.

இப்படி இவர்கள் இருவரும் போடும் சதியில் இருந்து ஆனந்தியை சிக்க வைக்காமல் கயல் காப்பாற்றி விடுவார். அந்த வகையில் ராஜி நினைக்கிற மாதிரி மனோஜ்க்கு ஆனந்தியை கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டார். இன்னும் இதில் பெரியப்பா என்னவெல்லாம் ஆடுபுலி ஆட்டம் ஆட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கயல் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News