வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஐஸ்வர்யா ராஜேஷை ஓரம் கட்டிய அருள்நிதி.. 3வது நாள் வசூலில் பெருத்த அடி வாங்கிய தீராக் காதல், மூர்க்கன்

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அருள்நிதி நடிப்பில் உருவான கழுவேத்தி மூர்க்கன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான தீராக் காதல் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. சமீபகாலமாக திரில்லர் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி வித்தியாசமாக கிராமத்து கெட்டப்பில் நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் மற்றும் துஷாரா விஜயன் போன்ற பிரபலங்களும் நடித்திருந்தனர். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு அருள்நிதியின் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் சண்டை காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களால் பேசப்பட்டது.

Also Read : ஐஸ்வர்யா ராஜேஷை பின்னுக்கு தள்ளிய அருள்நிதி.. மூர்க்கன், தீராக் காதல் வேட்டையாடிய முதல் நாள் கலெக்ஷன்

அதேபோல் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர் தோல்வி படம் கொடுத்து வந்த நிலையில் தீராக் காதல் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்தது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து ஜெய் நடித்திருந்தார். மேலும் இதன் மூலம் விட்ட மார்க்கெட்டை ஐஸ்வர்யா மீண்டும் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் முதல் நாளில் கழுவேத்தி மூர்க்கன் 60 லட்சம் வசூல் செய்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் தீராக் காதல் 45 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்தது. இந்நிலையில் படம் வெளியாகி மூன்று நாட்களான நிலையில் வசூல் வெளியாகியுள்ளது. தீராக் காதல் கிட்டத்தட்ட 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது.

Also Read : Kazhuvethi Moorkan Movie Review – அய்யனார் மீசையுடன் மிரட்டும் அருள்நிதி.. கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்

ஆனால் வெறும் 1.50 கோடி மட்டுமே மூன்று நாட்களில் வசூல் செய்துள்ளது. அதேபோல் கழுவேத்தி மூர்க்கன் படமும் மூன்று நாட்களில் வெறும் 1.7 கோடி மட்டும் வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷை அருள்நிதி ஓரம் கட்டி உள்ளார். கடைசியில் இரண்டு படங்களுக்குமே பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் தொடர்ந்து வந்தது.

அதுமட்டுமின்றி சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்த்த நிலையில் மந்தமாகத்தான் உள்ளது. மேலும் இனி வேலை நாட்கள் என்பதால் தீராக் காதல் மற்றும் கழுவேத்தி மூர்ககன் படத்தின் வசூல் பெருத்த அடி வாங்க வாய்ப்பிருக்கிறது.

Also Read : அருள்நிதிக்கு கை கொடுத்ததா கழுவேத்தி மூர்க்கன்? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Trending News