வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கீர்த்தி சுரேஷ் விரிக்கும் வலை.. சிக்கப் போகும் 3 பிரபலங்கள்!

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்தின் மூலம் தேசிய விருதைப் பெற்று விருவிருவென ஏறிய தனது மார்க்கெட்டை உடல் எடையை குறைத்து பின்பு, அப்படியே சரிந்து விட்டது.

இதன்பிறகு அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சாணி காகிதம் படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது நீங்கள் பல இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளீர்கள்.

ஆனால் உங்களுக்கு பிடித்த இயக்குனர்கள் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கீர்த்தி சுரேஷ், ‘நான் பல படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து உள்ளேன். எனக்கும் ஷங்கர், ராஜமவுலி, மணிரத்னம் போன்ற பிரம்மாண்ட இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

எனவே இவர்களது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன்’ எனவும் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்காக இப்படி இயக்குனர்களிடம் நாசுக்காக கொக்கி போட்டுக் கொண்டிருக்கிறார்.

அத்துடன் தன்னுடைய உடலமைப்பிலும் கவர்ச்சியை அதிகப்படுத்த ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகளையும் செய்து கொண்டிருக்கிறார். அதிலும் இவர் சமீபத்தில் தனது உதட்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து படவாய்ப்புகளை குவிக்க தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

Trending News