எட்டு வருடங்கள் சினிமா துறையில் சக்ஸஸ்ஃபுல் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவில் நுழைந்தவுடனே பல உச்ச நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு இவரை தேடி வந்தது.
2 015ஆம் ஆண்டு இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர் அடுத்தடுத்து தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் என ஜோடி போட்டார்.
ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற ஹீரோயின் சம்பந்தப்பட்ட கதைக்களங்களாக தேடி நடித்து வருகிறார்.கடந்த 12ஆம் தேதி தன்னுடைய 15 வருட கால நண்பனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கீர்த்தி சுரேஷ்.
கல்யாணத்துக்கு பின் ஓவர் நெருக்கம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் கூட இவர் இந்த அளவிற்கு எந்த ஹீரோக்கள் உடனும் நெருங்கி நடித்ததில்லை. கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர்கள் அனைவரும் நம்ம கீர்த்தியா என ஆடிப்போய் உள்ளனர்