வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பாலிவூட் போனதும் கூச்ச நாச்சதை மறந்த நடிகை கீர்த்தி.. இணையத்தில் பூகம்பத்தை உருவாக்கிய புகைப்படங்கள்

Keerthy Suresh: தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளுக்கு தான் குடும்ப குத்து விளக்கு என்ற பெயரை கொடுப்பார்கள். நம் வீட்டில் இருக்கும் சாதாரண பெண் போல் இருப்பதால் தான் அவர்களுக்கு அந்த பெயர் கிடைக்கும்.

ஆனால் ரசிகர்கள் குடும்ப குத்து விளக்கு என்று பெயர் கொடுத்த நிறைய ஹீரோயின்கள் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக்கை தான் கொடுத்திருக்கிறார்கள். அதாவது முதல் ஒன்று இரண்டு படங்களில் அடக்கமாக வந்துவிட்டு ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விடுவார்கள்.

அதற்கு அடுத்து நடிக்கும் படம், இருக்கும் இடம் என்பதற்கு ஏற்ற மாதிரி தங்களை மாற்றிக் கொள்வார்கள். பட வாய்ப்புக்காக நடிகைகள் இதை செய்தாலும், ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றம்தான். தற்போது இந்த லிஸ்டில் சேர்ந்திருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

சிவகார்த்திகேயனோடு சேர்ந்து நடித்த ரஜினி முருகன் படத்தின் மூலம் தான் கீர்த்திக்கு நல்ல அடையாளம் கிடைத்தது. பிங்க் நிற புடவையில் ஜிமிக்கி கம்மல் போட்டுக்கொண்டு உன் மேல ஒரு கண்ணு பாடலில் ரசிகர்களை கிரங்கடித்து இருப்பார்.

பூசினது மாதிரி உடல் அமைப்பு, ஜிமிக்கி கம்மல், நெத்தியில் பொட்டு, குழந்தைத்தனமான நடிப்பு இதனால் தான் கீர்த்தி தமிழ் சினிமாவில் சட்டென முன்னணி இடத்திற்கு வந்தது. அதன் பின்னர் உடல் எடையை குறைக்கிறேன் என்ற தப்பான முடிவு தான் அவருடைய மார்க்கெட் சரிவதற்கு காரணமாக இருந்தது.

இணையத்தில் பூகம்பத்தை உருவாக்கிய புகைப்படங்கள்

தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் மற்ற மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட் அடித்த தெறி ஹிந்தி ரீமேக்கில் கீர்த்தி இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. படத்தின் ஹீரோ வருண் தவான் பிறந்த நாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இது. இந்த புகைப்படத்தில் கீர்த்தி ஸ்லீவ் லெஸ், லோ நெக் ஜாக்கெட், தொப்புளுக்கு கீழ் புடவை என கவர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.

தென்னிந்திய படங்களை நடித்து முடித்துவிட்டு பாலிவுட்டுக்கு போக வேண்டும் என்பது எல்லா நடிகைகளின் அசையுமாகத்தான் இருக்கும்.

அந்த கனவு நிறைவேறியது தொடர்ந்து அங்கு படங்கள் நடிக்க வேண்டும் என்பதற்காக இந்த நடிகைகள் தங்களை மாற்றிக் கொள்வதுதான் முகம் சுளிக்கும் விதமாக அமைந்து விடுகிறது. பாலிவுட்டுக்கு போனா கூச்ச நாச்சம் கூட இல்லாமல் போய்விடும் போல என்று இப்போது கீர்த்தியை கிண்டல் அடித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Trending News