வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

துரத்தி அடித்ததால் சர்வமும் அடங்கி போன கீர்த்தி சுரேஷ்.. இனிமே தான் இருக்கு தரமான சம்பவம்

சினிமாத்துறையில் பொதுவாக நடிகைகள் இரண்டு, மூன்று படங்களில் நடித்துவிட்டு அதன் பின் காணவில்லை என்றால் அதோடு ரசிகர்கள் அவர்களை மறந்து விடுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் வெகு காலமாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்து இறுதியாக அண்ணாத்தே படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார். பார்ப்பதற்கு பப்லியாக மிகவும் அழகாக இருந்த இவர் தன்னுடைய உடல் தோற்றத்தை மாற்றிக்கொண்டு எழும்பும், தோலுமாக மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இவருடைய மாற்றம் ஒரு வகையில் அவரின் திரை வாழ்க்கைக்கு சரியாக தெரிந்தாலும் இவர் எடையை குறைத்துக் கொள்வதன் காரணம் குறித்து ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் எடையை குறைத்து கொண்டதே, பாலிவுட் பக்கம் செல்வதற்காகதான் என்ற ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் பாலிவுட்டிலும், எந்த படத்திலும் கீர்த்தியை காணமுடியவில்லை. இறுதியாக அவர் பல தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

அதன்படி அஜித் நடித்த வேதாளம் படத்தில் லட்சுமிமேனன் தங்கச்சி வேடத்தில் நடித்தது போல, தெலுங்கில் அந்த வேதாளம் படத்தை, அஜித் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத்தின் தங்கச்சி கேரக்டருக்கு நடித்த லட்சுமி மேனனுக்கு பதிலாக சிரஞ்சீவிக்கு தங்கச்சியாக தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படியே தங்கை, அக்கா,அம்மா என்று போனால் மார்க்கெட் என்னவாகும் என்ற பயத்தில் இருந்த கீர்த்தி, அடுத்தடுத்து பல படங்கள் கமிட் ஆகி விடலாம் என்று எண்ணி பல இயக்குனர்களை அணுகியிருக்கிறார்.

பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களை தொடர்ந்து வேறு மொழி படங்களில் நடிக்க ஆசைப்படும் கீர்த்தி பல இடங்களில் போராடியும் சரியான வாய்ப்புகள் இல்லாததால், மீண்டும் புகுந்த வீட்டிற்கு செல்லலாம் என்று நினைத்து தமிழ் சினிமாவிற்குள் மீண்டும் தஞ்சம் அடைந்து இருக்கிறார்.  இதனால் ரசிகர்கள் அவரை ஓவரா ஆடக்கூடாது, மேடம் என்று கலாய்த்து வருகின்றனர் 

கீர்த்தி சுரேஷ் வந்தவுடன் தமிழில் இரண்டு படங்கள் புக்காகி விட்டது. நடிகர் ஜெயம் ரவியை வைத்து ராஜேஷ் இயக்கும் ஒரு காமெடி படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார். அதுமட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்திலும் கீர்த்திசுரேஷ் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கீர்த்தியை இப்படி எலும்பும் தோலுமாக இருப்பது அவ்வளவாக பிடிக்கவில்லை.பழைய கீர்த்தி சுரேஷ் தான் பிடிக்கும். அதனால் கொஞ்சம் வெயிட் போட்டு ரசிகர்களை கவர மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்க இருக்கிறாராம்.

Trending News