Keerthy Suresh: தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் டாப் இடத்தில் வந்த நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் ஒருவர். இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமாக இருந்தாலும், கீர்த்திக்கு பெரிய அடையாளத்தை கொடுத்த படம் ரஜினி முருகன் தான்.
சிவகார்த்திகேயன் காம்போவில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து நடிகர் விஜய் உடன் இணைந்து பைரவா, விக்ரம் நடித்த சாமி 2 படங்கள் ஹீரோயினாக நடித்தார்.
கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி படம் அவருக்கு தென்னிந்திய சினிமாவில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக கீர்த்தி சுரேஷ் இருந்திருந்தாலும், அதே சமயத்தில் அதிக அளவில் கிண்டலுக்கும் ஆளானார்.
இதனாலேயே மகாநதி படத்தில் சாவித்திரி கேரக்டரில் எல்லாம் இவரால் நடிக்க முடியாது என்ற நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தது. அதை தாண்டி அந்த படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி ஆகவே வாழ்ந்து காட்டினார்.
சாவித்திரி குடும்பத்தினர் இந்த படத்தை பார்த்துவிட்டு அவரே நேரடியாக வந்தது போல் இருந்தது என்று சொல்லி மனதார பாராட்டு இருந்தார்கள். அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதற்கிடையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற விபரீத ஆசையும் கீர்த்தி சுரேஷுக்கு வந்தது.
இதை தொடர்ந்து உடல் எடையை அதிகமாக குறைத்ததால் தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். அதுமட்டுமில்லாமல் பொன்னியின் செல்வன் படத்தை புறக்கணித்துவிட்டு அண்ணாத்தே படத்தில் நடித்து கிடைக்க இருந்த பெரிய வெற்றியும் குழி தோண்டி புதைத்து விட்டார்.
அதன் பின்னர் சில வருடங்கள் கழித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமனிதன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்
கீர்த்தி சுரேஷின் மயங்க வைக்கும் அழகை சில காலமாக சினிமா ரசிகர்கள் மறந்திருந்தனர். சமீபத்தில் வெளியாகி இருக்கும் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் மீண்டும் அதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்திருக்கின்றன.

மணி வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய புடவை, அதற்கு லோ நெக் ஜாக்கெட் என புடவையிலேயே படு கிளாமராக போஸ் கொடுத்து இருக்கிறார். இந்த போட்டோக்களை பார்க்கும் பொழுது பைரவா படத்தில் விஜய் கீர்த்தியை பார்த்து செம்பொன் சிலையோ, இவள் ஐம்பொன் அழகோ என்று பாடியிருப்பார். அந்த வரிகள் தான் மனதில் வந்து போகிறது.