தங்கலானுக்கு போட்டியாக வெளிவரும் கீர்த்தி சுரேஷின் ரகுதாத்தா.. ட்ரெய்லர் பாக்குற மாறி இருக்கா.?

raghu thatha
raghu thatha

Raghuthatha Trailer: ஜூலை மாதம் முடிவுக்கு வரும் நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. அதில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்கலான், அந்தகன், டிமான்ட்டி காலனி 2, ரகு தாத்தா ஆகிய படங்கள் வெளிவருகிறது.

அதில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக உருவாகி இருக்கும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இதன் டீசர் ரசிக்கும் வகையில் இருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

அதில் போலீஸ் ட்ரைனிங்கில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் ஹிந்தி தெரியாமல் படாத பாடுபடுகிறார். இருந்தாலும் பிரமோஷனுக்காக ஹிந்தியை கற்றுக் கொள்ளும் அவர் பல தகிடு தத்தம் செய்கிறார்.

விக்ரமுடன் போட்டி போடும் கீர்த்தி சுரேஷ்

அவருடன் அய்யர் மாமியாக வரும் தேவதர்சினியும் தன் பங்குக்கு கலாட்டா செய்கிறார். இதில் எம் எஸ் பாஸ்கர் இன்னும் பிற நட்சத்திரங்களும் கவனம் ஈர்த்துள்ளனர்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதையாக இருந்தாலும் சீரியஸாக இல்லாமல் காமெடியாக ட்ரைலர் நகர்கிறது. இதிலிருந்து படம் கலகலப்பாக இருக்கும் என தெரிகிறது. படத்தின் பெயரும் ஃபேமஸான வசனம் என்பதால் தற்போது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆக மொத்தம் சுதந்திர தின ரேசில் டாப் ஹீரோக்களுடன் போட்டி போடும் கீர்த்தி சுரேஷ் கல்லா கட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதில் தங்கலான் உலக அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினத்திற்கு வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா

Advertisement Amazon Prime Banner