செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

‘A’ பட நடிகையுடன் கூட்டு சேரும் கீர்த்தி சுரேஷ்.. குடும்பத்தோட பார்க்க முடியாத கதையா.?

Actress Keerthy Suresh: கீர்த்தி சுரேஷ் கைவசம் இப்போது ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. சமீபத்தில் சிரஞ்சீவியுடன் அவர் நடித்த போலா சங்கர் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அதை தொடர்ந்து இப்போது அவர் தமிழில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் சர்ச்சை நடிகையுடன் கூட்டு சேர்ந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போதெல்லாம் ஹீரோயின்கள் சினிமாவில் நடிப்பதை காட்டிலும் வெப் தொடர்களில் நடிக்க தான் விரும்புகின்றனர். அதன்படி தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அக்கா என்ற ஒரு வெப் தொடர் வர இருக்கிறது.

அதில் நடிகை ராதிகா ஆப்தேயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலிவுட், ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் ரஜினியுடன் கபாலி படத்தில் இணைந்து நடித்திருந்தார். அதேபோன்று ஏகப்பட்ட சர்ச்சை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

Also read: மீண்டும் தமிழ் மார்க்கெட்டை பிடித்த கீர்த்தி சுரேஷ்.. கைவசம் இவ்வளவு படங்களா.?

அப்படி அவர் நடித்த ஒரு காட்சி மிகப் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. ஆனாலும் அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனக்கு பிடித்த கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருடன் தான் இப்போது கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்.

அப்படி என்றால் இது சர்ச்சையான கதையாக இருக்குமா என்ற ஒரு ஆவல் அனைவருக்கும் எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் குடும்பத்துடன் பார்க்க முடியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இப்போதெல்லாம் வெளிவரும் வெப் சீரிஸ் எதுவும் குடும்பத்தோடு பார்க்கும்படி எடுக்கப்படுவதில்லை.

சென்சார் இல்லை என்ற ஒரே காரணத்தினால் எல்லை மீறிய காட்சிகள் காட்டப்படுகிறது. அதுவே சோசியல் மீடியா சர்ச்சைக்கும் ஆளாகிறது. அந்த வகையில் இந்த அக்கா வெப் தொடரும் சர்ச்சைக்கு வித்திடுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: இரவு பார்ட்டியில் உச்சகட்ட போதையில் தடுமாறிய நடிகை.. குடித்து கும்மாளம் போடும் சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி

Trending News