Keerthy Suresh: கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு பிஸியாக மாறிவிட்டார். சோசியல் மீடியாவில் கூட அவர் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அதேபோல் அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வரும் அவர் இப்போது அக்கா என்ற வெப் தொடரில் நடிக்கிறார். அதன் டீசர் தற்போது வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
சமீபகாலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை கீர்த்தி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் அக்காவும் இணைந்துள்ளது.
இந்த சீரிஸில் ராதிகா ஆப்தேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த சீரியஸை தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார்.
பீரியட் திரில்லர் வகையைச் சேர்ந்த இந்த வெப் தொடரில் கீர்த்தியின் லுக் வேற லெவலில் இருக்கிறது. கவர்ச்சியாக புடவை கட்டி பழங்கால நகைகளை அணிந்து மிரட்டலாக வரும் தோரணையும் கவனம் பெற்றுள்ளது.
அதேபோல் பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கிறது. இப்படியாக வெளிவந்துள்ள இந்த டீசர் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இதை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் புது அக்காவா என கீர்த்தியை கிண்டல் அடிக்கின்றனர். ஏற்கனவே சோசியல் மீடியாவில் பலூன் அக்கா டெய்லர் அக்கா என பலர் இருக்கின்றனர்.
அந்த வரிசையில் கீர்த்தியும் இணைந்துள்ளார். அட இது கூட நல்லாதான்பா இருக்கு என சில மீம்ஸ் கூட பரவி வருகிறது.