வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

முகம் சுழிக்கும் அளவிற்கு கிளாமராக மாறிய கீர்த்தி சுரேஷ்.. ரூட்டை மாற்றிய மகாநடிகை

Keerthy Suresh: ஒரு நேரத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் எப்பொழுது ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்தாரோ, அப்பொழுது அவருடைய மார்க்கெட் தமிழில் காணாமல் போய்விட்டது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த கீர்த்தி சுரேஷ் கடைசியாக உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்ததின் மூலம் வெற்றியைப் பார்த்தார்.

ஆனாலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார். தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். பாலிவுட்டுக்கு போனால் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் அதன் மூலம் அங்கே ஒரு முத்திரையை பதித்து விடலாம் என்று நினைத்தார்.

keerty suresh
keerty suresh

அங்கே போனால் அதற்கு ஏற்ற மாதிரி மாறிக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஏற்ப பாலிவுட் நடிகைக்கு டப் கொடுக்கும் விதமாக கிளாமரில் இறங்கிவிட்டார். அத்துடன் அவ்வப்போது கிளாமருடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வைரலாக்கி பல தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் இவர் பக்கம் திருப்பி வருகிறார்.

keerty suresh (1)
keerty suresh (1)

அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் புகைப்படங்களை பார்க்கும் பொழுது தமிழில் சாவித்திரி போல ஹோம்லி லுக்கில் நடித்துவிட்டு வாய்ப்பு இங்கே கிடைக்கலை என்றதும் பாலிவுட்டில் முகம் சுளிக்கும் அளவிற்கு கிளாமரில் இறங்கனும் என்று சொல்லும் அளவிற்கு கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து வருகிறார்.

வாய்ப்பு இல்லை என்றதும் தன்னுடைய ரூட்டையே மாற்றும் விதமாக மகா நடிகையாக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் தற்போது வாய்ப்புக்காக கிளாமர் நடிகைக்கு டப் கொடுக்கும் அளவிற்கு இறங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Trending News