Keerthy Suresh : ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழில் மூன்று படங்கள் வெளியாகி இருந்தது. விக்ரமின் தங்கலான், அருள்நிதியின் டிமான்ட்டி காலனி மற்றும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஆகிய படங்கள் வெளியான நிலையில் மூன்று படங்களுமே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனாலும் தங்கலான், டிமான்ட்டி காலனி 2 வசூலை ஒப்பிடும் போது கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படம் பின்வாங்கி இருக்கிறது. அதாவது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படம் வசூலை வாரி குவித்து வருகிறது.
அதன்படி இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 60 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. அதேபோல் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான டிமான்டி காலனி 2 படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 6 கோடி வசூல் செய்திருக்கிறது.
கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா இரண்டாவது நாள் வசூல்
இந்த படங்களை ஒப்பிடும்போது ரகு தாத்தா படம் லட்சங்களில் தான் வசூல் செய்து வருகிறது. அதன்படி முதல் நாளில் 25 லட்சம் வசூல் செய்திருந்தது. படத்திற்கு வரவேற்பு இருந்தபோதிலும் தங்கலான், டிமான்ட்டி காலனி 2 போன்ற பெரிய பட்ஜெட் படங்களால் இரண்டாவது நாளில் ரகு தாத்தா படத்திற்கு கூட்டம் குறைய தொடங்கியது.
இதனால் நேற்றைய தினம் 10 லட்சம் மட்டுமே ரகு தாத்தா படத்திற்கு வசூலாகி உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்தப் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லாமல் தனியாக கீர்த்தி சுரேஷின் படம் வெளியாகி இருந்தால் நல்ல வசூலையே பெற்றிருக்கலாம்.
இந்தி திணிப்பு, ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை பற்றி ரகு தாத்தா படத்தில் பேசப்பட்டிருந்தது. அதிலும் கீர்த்தி சுரேஷ், ரவீந்தர் போன்றோர் அற்புதமாக நடித்திருந்தனர். வசூலில் பின்தங்கி இருந்தாலும் இந்தப் படம் கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டை வாங்கி தந்திருக்கிறது.
ரீஎன்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷ்