Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கோலமாவு கோகிலா ஸ்டைலில் ரிவால்வர் ரீட்டா.. திருமணத்திற்கு பின் மாஸ் காட்டும் கீர்த்தி சுரேஷ்

கோலமாவு கோகிலா ஸ்டைலில் ரிவால்வர் ரீட்டா.. திருமணத்திற்கு பின் மாஸ் காட்டும் கீர்த்தி சுரேஷ்

Keerthi Suresh : கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடித்த படம் சரியாக போகவில்லை. திருமணத்திற்கு பிறகு அவர் ஓவர் கவர்ச்சி காட்டி வருவதாகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. இப்போது கீர்த்தி சுரேஷ் கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் […]

Keerthi Suresh : கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடித்த படம் சரியாக போகவில்லை. திருமணத்திற்கு பிறகு அவர் ஓவர் கவர்ச்சி காட்டி வருவதாகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. இப்போது கீர்த்தி சுரேஷ் கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்த சூழலில் அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ரிவால்வர் ரீட்டா படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே கே சந்துரு இயக்கத்தில் ரிவால்வர் ரீட்டா படம் உருவாகி இருக்கிறது. இதில் ரெடின் கிங்ஸ்லி, ராதிகா போன்றோர் நடித்திருக்கின்றனர்.

குடும்பமாக இருந்து எவ்வாறு கொலையாளிகளை கண்டுபிடித்து சுட்டுக் கொல்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை. அதுவும் இந்த வீடியோவில் ரெடின் கிங்ஸ்லி காமெடி பட்டையை கிளப்பி இருப்பது வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது.

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா ரிலீஸ் தேதி

மேலும் ராதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரையும் ஒரே திரையில் பார்ப்பது அட்டகாசமாக அமைந்திருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் சாயலில் இருப்பதாக கூறி வருகிறார்கள்.

ஏனென்றால் அதுவும் ஒரு பிளாக் காமெடி ஜானரில் உருவாகி இருந்தது. அதேபோல தான் ரிவால்வர் ரீட்டா படமும் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 27 திரைக்கு வர இருக்கிறது.

தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா படம் சரியாக போகவில்லை. இந்த சூழலில் ரிவால்வர் ரீட்டா படத்தின் மூலம் அவருக்கு ஒரு நல்ல ஸ்கோப் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.