சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

KGF: பிரதீப் ரங்கநாதனுக்கு ஷாக் கொடுத்த கேஜிஎஃப் இயக்குனர்.. டைட்டிலில் ஏற்பட்ட குழப்பம்

KGF: கேஜிஎஃப் இயக்குனரின் சலார் கடந்த வருடம் வெளியானது. பிரபாஸ் நடிப்பில் வெளியான இப்படத்தின் 2ம் பாகம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்க இருக்கும் படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஜூனியர் என்டிஆர் உடன் அடுத்ததாக இவர் கைகோர்க்க இருக்கிறார்.

இப்படத்திற்கு டிராகன் என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு உட்பட தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியாகும். அதில் தான் தற்போது ஒரு குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

அதாவது தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் பெயரும் டிராகன் தான். சமீபத்தில் தான் இப்படத்தின் பூஜை போடப்பட்டு அறிவிப்பும் வெளியானது.

கேஜிஎஃப் இயக்குனரின் டிராகன்

இப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. அப்படி என்றால் ஒரே பெயரில் 2 படமா என்ற குழப்பமும் சந்தேகமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதையெல்லாம் கவனிக்காமலா கே ஜி எஃப் இயக்குனர் டைட்டிலை தேர்ந்தெடுத்து இருப்பார் என்ற பேச்சும் ஒரு பக்கம் எழுந்துள்ளது ஆனால் ஜூனியர் என்டிஆர் கூட்டணியின் படத்தின் பெயர் இதுவாக இருக்க வாய்ப்பே கிடையாது.

சும்மா ஒரு எதிர்பார்ப்பை கிளப்புவதற்காக இந்தப் பெயரை அவர்கள் உபயோகப்படுத்தி இருக்கலாம். ஏனென்றால் சலார் பட போஸ்டரில் பிரபாஸை காட்டும் போது கூட டைனோசர் என்று தான் குறிப்பிட்டிருந்தார்கள்.

அப்படித்தான் இந்த டிராகன் டைட்டிலும் இருக்கும். நிச்சயம் நாம் எதிர்பார்க்காத ஒரு டைட்டிலை இயக்குனர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இந்த டைட்டிலை பார்த்து பிரதீப் ரங்கநாதன் அதிர்ச்சி அடைந்து தான் இருப்பார்.

Trending News