புதன்கிழமை, ஜனவரி 8, 2025

‘அவர் விரும்பினால் நான் இயக்க ரெடி..’ தமிழ் ஹீரோவை இயக்க காத்திருக்கும் கேஜிஎஃப் இயக்குனர்

திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த அதிரடி ஆக்ஷன் படமான கே ஜி எஃப் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்ற இயக்குனராக மாறியவர் கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் கன்னட நடிகர் யாஷ் அவர்களை வைத்தே முதல் பாகத்தை வெற்றிகரமாக வெளியிட்டு வசூல் வேட்டையை குவித்து முடித்த பின், தற்போது 2-ம் பாகத்தை வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிடப் போகிறார்.

எனவே அந்தப் படத்திற்கான முன்பதிவு தற்போது திரையரங்குகளில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிரசாந்த் நீல் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆகையால் இவருடைய அடுத்த படத்தை குறித்து தெரிந்துகொள்ள சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பிரசாந்த் நீல் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘விஜய் சார் ஒரு லெஜெண்ட். எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடுத்தால், அவர் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு படம் இயக்க ரெடி’ என தளபதி ரசிகர்களை குளிர்விக்கும் விதத்தில் பேட்டியளித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த மாதம் விஜய் புதுச்சேரி முதல்வரை சந்தித்த போதே, பிரசாந்த் நீல் அவரையும் சந்தித்திருக்கிறார் என வதந்திகள் கிளம்பியது. ஆனால் அது தற்போது உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அவர்களிருவரும் சந்தித்து அடுத்த படத்திற்கான கதையை பிரசாந்த் நீல் இடம் விஜய் கேட்டு இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

அதுமட்டுமின்றி விஜய் ஏற்கனவே கேஜிஎப் போலவே ஒரு படம் நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். ‘சும்மாவே தளபதி ரசிகர்கள் கோடு போட்டா ரோடு போட்டு விடுவாங்க’ தற்போது பிரசாந்த் நீல், விஜய்யை இயக்க ஆசை பட்டிருக்கும் நிலையில், அது தான் ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது என்பது விஜய்க்கு தெரிந்தால் நிச்சயம் அதை செய்வார் என ரசிகர்கள் நம்பத் தொடங்கிவிட்டனர்.

அத்துடன் கே ஜி எஃப்-2 ரிலீஸ் ஆகும் ஒரு தினத்திற்கு முன்பு தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் என்பதால் எந்தப் படத்திற்கு ரீதியாக பாதிப்பு ஏற்படப் போகிறது என்ற பயத்தில் படக்குழுவினர் மூழ்கி உள்ளனர்.

Trending News