திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூர்யாவிற்கு அப்பாவாக நடிக்கும் கேஜிஎப் வில்லன்.. ஆர்டிஸ்ட் செலக்ஷனிலேயே பகீர் காட்டும் கங்குவா

Kanguva: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவா படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தையே அல்லோலப்படுத்தியது. அந்த அளவுக்கு சூர்யாவின் கெட்டப் அனைவரையும் பயமுறுத்தும் படியாக எடுத்துள்ளார் சிறுத்தை சிவா. கங்குவா படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் முடிவுற்றது.

அடுத்ததாக தாய்லாந்தில் தீவு சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்க வேண்டும் என்பதற்காக படக்குழு சென்றிருக்கிறது. கங்குவா படத்தில் பிளாஷ்பேக் காட்சிகள் பழங்குடியினர் மக்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளாக எடுத்து வருகின்றனராம். இதில் சூர்யாவுக்கு அப்பாவாக பிரபல நடிகர் நடித்து வருகிறாராம்.

Also Read : சுயநலமாக நடந்து கொண்ட சிவகார்த்திகேயன், சூர்யா.. திறமையால் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த விஜய்

அதாவது யாஷ் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் தான் கே ஜி எஃப். இந்த படத்தில் நடித்த வில்லன் தான் தற்போது சூர்யாவுக்கு அப்பாவாக நடிக்க இருக்கிறார். அந்த அளவுக்கு ஆர்டிஸ்ட் செலக்ஷனில் பகீர் காட்டும் அளவிற்கு கங்குவா டீம் செயல்பட்டு வருகிறது.

அதாவது கே ஜி எஃப் படத்தில் ஆண்ட்ரூஸ் என்ற கதாபாத்திரத்தில் வில்லன் நடிகர் ஒருவர் நடித்திருந்தார். இவருடைய நிஜ பெயர் பி எஸ் அவினாஷ். கன்னட சினிமாவில் நிறைய படங்களில் இவர் நடித்திருந்தாலும் மிகப்பெரிய பெயரையும் புகழையும் வாங்கி தந்தது கே ஜி எஃப் படம் தான். மிரட்டலான கேங்ஸ்டராக நடித்து வந்த இவர் சூர்யாவுக்கு அப்பாவாக நடிக்க இருக்கிறார்.

Also Read : சூர்யா, தனுஷ் மாதிரி கனவு கண்ட நடிகர்.. வயசு கோளாறில் நடிகையிடம் மயங்கி கிடக்கும் வாரிசு

ஆகையால் இதிலும் வில்லனாக அவரது கதாபாத்திரம் இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. ஆனாலும் கங்குவா சூர்யாவுக்கு சரியான ஆளை தான் இந்த படக்குழு தேர்ந்தெடுத்து இருக்கிறது. மேலும் படத்தைப் பற்றிய நிறைய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி இருக்கிறது.

மேலும் சமீபகாலமாக பெரிய ஹீரோக்களுக்கு வில்லன் நடிகர்களை தான் இயக்குனர்கள் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்கள். அந்த வகையில் விஜய்யின் லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அப்பாவாக நடித்து உள்ள நிலையில், இப்போது கங்குவாவில் கே ஜி எஃப் நடிகர் பி எஸ் அவினாஷ் நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கங்குவா சூர்யாவுக்கு அப்பாவாக கே ஜி எஃப் பட வில்லன்

bs-avinash
bs-avinash

Also Read : லண்டனில் மீட்டிங் போடும் விஜய், சூர்யா.. விரைவில் வெளியாக இருக்கும் அடுத்த பட அப்டேட்

Trending News