ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கேஜிஎஃப்2 படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்.. பன்மடங்கு லாபம் பார்த்த தயாரிப்பாளர்

சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த படம் கே ஜி எஃப் 2. மேலும், விஜய்யின் பீஸ்ட் பட தோல்விக்கு காரணம் கே ஜி எஃப் 2 தான் என கூறப்படுகிறது. அவ்வாறு கன்னட மொழியில் உருவான இப்படம் அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியாகி தனது ஆதிக்கத்தை காட்டியுள்ளது.

மேலும் கேஜிஎப் 2 படம் வெளியாகி முதல் நாளில் வசூல் சாதனை செய்து புதிய வரலாற்றை படைத்தது. மேலும் தொடர்ந்து நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து கிட்டத்தட்ட 1125 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது. எப்படியும் கே ஜி எஃப்2 படம் 1200 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரபல ஓடிடி நிறுவனம் கே ஜி எஃப்2 படத்தை கைப்பற்றி உள்ளது. கன்னட திரைப்படங்களில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் கே ஜி எஃப் 2. இப்படம் உருவாக 100 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.

இப்போது கே ஜி எஃப் படம் பல மடங்கு லாபம் பார்த்து உள்ளது. இந்நிலையில் அமேசான் பிரைம் நிறுவனம் 320 கோடிக்கு கேஜிஎஃப் 2 படத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் இப்படம் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது.

திரையரங்குகளில் படம் வெளியாகிய நல்ல வசூல் வேட்டை ஆடிய நிலையில் ஓடிடி நிறுவனத்திற்கும் படத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு லாபம் வைத்து விற்கப்பட்டுள்ளது. மேலும் கேஜிஎப் 2 படம் மே 27 தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இது கேஜிஎஃப் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கான அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதேபோல் ஆர் ஆர் ஆர் படத்தின் உரிமையையும் தென்னிந்திய மொழிகளில் ஜீ 5 ஒடிடி தளமும், ஹிந்தி பதிப்பை நெட்ஃபிக்ஸ் கைப்பற்றியுள்ளது.

Trending News