வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஏதே.. களவாணி படத்துல KGF யஷ் ஆ.. ஓவியா மட்டும் correct-ஆ சூஸ் பண்ணி இருந்தால்

விமல் நடித்த படங்களில் களவாணி திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்த படத்தில் விமலுடன், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இளவரசு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சற்குணம் இயக்கிய இந்த படத்திற்கு எஸ்.எஸ். குமரன் இசையமைத்திருந்தார். நசிர் என்பவர் இந்த படத்தை தயாரிக்க, ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டது.

இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து, அப்போது அதலபாதாளத்தில் இருந்த, கன்னட இண்டஸ்ட்ரி இந்த படத்தை கையில் எடுத்தது. கன்னடத்தில் இந்த படம் ரீமேக் ஆக, அந்த படத்திலும் ஓவியா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து, அந்த படத்தில் ஹீரோவா யஷ் நடித்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..

KGF கொடுத்த பிரமாண்டம்

பிரபாஸ்-க்கு எப்படி பாகுபலி ஒரு பிரம்மாண்ட படமாக அமைந்ததோ, அதே போல தான் kgf படம் யஷ் மார்க்கெட்டை சர் என்று டாப் கியரில் ஏற்றிவிட்டது. இவர் ஆரம்பத்தில், சிறிய படங்களில் தான் நடித்து வந்தார். அப்படி இவர் நடித்த படம் தான் கிரதகா..

இந்த படம் அவருக்கு அங்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. ஓவியாவுக்கு ஆரம்பத்தில் நல்ல படங்கள் அமைந்தாலும், சினிமாவில் சாதிக்க glamour தான் தேவை என்று தவறான முடிவை எடுத்துவிட்டார்.

அதுமட்டுமின்றி, போல்ட் ஆன கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்ற பெயரில், 96 ml போன்ற படத்தில் நடித்து இன்னும் தன் பெயரை கெடுத்துக்கொண்டார். அவர் மட்டும் சரியான கதைகளை தேர்வு செய்து நடித்திருந்தால், இன்று டயர் 2 நடிகைகளில் முக்கியமானவராக இருந்திருப்பர்.

Trending News