Kiruthiga Udhayanidhi: இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
கிருத்திகா உதயநிதி படங்களைப் பொறுத்த வரைக்கும் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுகிறதோ இல்லையோ ஃபீல் குட் படங்களாக அமைந்துவிடும்.
வணக்கம் சென்னை, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் எல்லாம் இந்த லிஸ்ட் தான்.
2013 ஆம் ஆண்டு வணக்கம் சென்னை திரைப்படத்தை இயக்கிய கிருத்திகா 2018 ஆம் ஆண்டு காளி என்ற படத்தை இயக்கினார்.
மாஸ் ஹீரோவுடன் கூட்டணி போடும் கிருத்திகா உதயநிதி
இதன் பின்னர் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு இவரிடம் இருந்து எந்த பட அறிவிப்புகளும் வரவில்லை. பின்னர் 2022 இல் காகித கப்பல் என்னும் வலைத்தொடரை ஜீ தமிழ் சேனலுக்காக இயக்கியிருந்தார்.
அதிலிருந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தான் காதலிக்க நேரமில்லை படத்தை இயக்கினார். கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு கம்பேக் கொடுத்த கிருத்திகாவுடன் ஜெயம் ரவி கை கோர்த்தார்.
இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் ஜெயம் ரவிக்கு முக்கியமான படமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் கிருத்திகா உதயநிதி இணைய இருக்கிறார்.
இவர் சொல்லிய கதை விஜய் சேதுபதிக்கு ரொம்ப பிடித்துப் போக கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
கிருத்திகா மீது நம்பிக்கை இருக்கிறது இல்லையோ ரெட் ஜெயன்ட் இருக்கும் வரை பெரிய ஹீரோக்கள் பயப்படாமல் அவருக்கு கால் சீட் கொடுப்பார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.