செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அஜித்துடன் ஜோடி போட்டு காணாமல் போன 5 நடிகைகள்.. சின்னத்திரையில் கலக்கும் அந்த 6 அடி ஹீரோயின்

Kollywood Actor Ajith’s actresses and their latest profession: தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொள்ள ஆர்வம் இல்லாத இந்த அழகனுக்கு ரசிகர்களோ ஏராளம். ரியல் லைஃபிலும். ரீல் லைஃபிலும் மாதர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளும்  இந்த  மன்னவனுடன் நடித்த நடிகைகள் “ஹி இஸ் சோ ஸ்வீட்” என்ற  வாக்கியத்தை சொல்ல தவறுவதில்லை.

அஜித்துடன் சேர்ந்து வெற்றிப் படம் கொடுத்த நடிகைகள் சிலர் வெள்ளி திரைக்கு முழுக்கு போட்டு சின்னத்திரையில் கலக்கி வருகிறார்கள்.

ஹீரா: காதல் கோட்டையில் அஜித்தை விடாமல் துரத்தி காதலித்த ஹிரா நிஜ வாழ்விலும் அவருடன் ஜோடி சேர முற்பட்டார் என்பதே உண்மை. சந்தர்ப்ப சூழ்நிலையால் இவர்கள் காதல் கைகூடாமல் போனது. தொழிலதிபருடன் மணமாகி விவாகரத்து ஆன நிலையில் அமெரிக்காவில் செட்டிலான ஹீரா, பெண்கள் குழந்தைகளுக்குகாக ஒரு அமைப்பை நிறுவி அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

Also read: விஜய் அஜித் இல்லனா என்ன நடக்கும்.. கடைசியில் அசிங்கப்பட்டு நின்ன உச்ச நட்சத்திரங்கள்

மானு: உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என்று தமிழ் ரசிகர்கள் அனைவரும் திரும்பி பார்த்த நடிகை மானு. பரதநாட்டியம் மற்றும் கதக் நாடக கலைஞரான மானு ஒரே படத்தில் ரசிகர்களின் ஹைப்பை எகிற வைத்துவிட்டு  பின் திரைத்துறையில் இருந்து மாயமானார். முன்னணி நடிகரின் ஆலோசனையினால் 16 வருடங்களுக்குப் பின் இவர் நடித்த என்ன சத்தம் இந்த நேரம் படமும் சரியாக  போகவில்லை.

பிரியங்கா உபேந்திரா: இந்திய மொழிகள் பலவற்றில் பிசியான நடிகையாக இருந்த பிரியங்கா உபேந்திரா அஜித்துடன் ராஜா படத்தில் இணைந்து நடித்தார். கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா. கன்னடா, பெங்காலி திரைப்படங்களில் தலைகாட்டி வரும் பிரியங்கா சென்ற ஆண்டு சோதனை முயற்சியாக  சிசிடிவி கேமராவின் கோணத்தில் ஒரே லென்ஸால் உருவாக்கப்பட்ட கேப்ச்சர் திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வசுந்தரா தாஸ்: “வாழ்றதுக்காக எந்த ரிஸ்க்னாலும் எடுப்பேன்” என்று சிட்டிசன் படத்தில் இளைஞர்களை கட்டிப்போட்ட நாயகி வசுந்தரா தாஸ் கமலுடன் ஹேராம் படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நடிப்பை தாண்டி  மிகச்சிறந்த பாடகர் ஆன வசுந்தரா டிரம்ஸ் கலைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி அடையாளம் தெரியாமல் மாறி விட்டார்.

கனிகா: அஜித்துடன் வரலாறு படத்தில் இணைந்த கனிகா தமிழ் மலையாளம் என்று வந்த வாய்ப்புகளை விடாமல் நடித்துக் கொண்டிருந்தார் மேலும் டப்பிங் கலைஞராக பல படங்களில் பணியாற்றி இருந்த இவர் திருமணத்திற்கு பின் சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக தமிழ் மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு உள்ளார் கனிகா.

Also read: அஜித், விஜய் படத்தை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவி கூறிய காரணம்.. கேப்பில் ஸ்கோர் செய்த த்ரிஷா

Trending News