புதன்கிழமை, ஜனவரி 8, 2025

திடீரென சூட்டிங்கை நிறுத்திய அஜீத்.. டங்குவாரை பிதுக்கி எடுத்தியா படக்குழு

Kollywood Actor Ajith’s Vidamuyarchi update: சினிமாவில் நடிகர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக் கொண்டு போகின்றனர். ரசிகர்களை கையில் வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்க போராடும் நடிகர்களின் மத்தியில் “ரசிகர்களே! முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள் டைம் இருந்தால் என் படத்தை பாருங்கள், பிடித்திருந்தால் கொண்டாடுங்கள்!” என்று ரசிகர் மன்றத்தை கலைத்தவருக்கு ரசிகர்களோ ஏராளம்.

நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் கூடிக் கொண்டே போகிறது. அஜித்தின் ரசிகர்கள் அவரின் விடாமுயற்சி அப்டேட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். துணிவிற்கு பின் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விடாமுயற்சி. தொடர்ந்து 70 நாட்கள் கால் சீட் கொடுத்து அஜர்பைஜானில் வேகவேகமாக தயாராகி வருகிறது இந்த படம்.

விடாமுயற்சியில் அஜித் சமூகப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போராளியாக வருகிறார் என்ற தகவல் கசிந்த நிலையில் ரசிகர்களை தாண்டி சினிமா ஆர்வலர்கள் அரசியல்வாதிகள் என பலரும் இப்படத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

Also read: பான் இந்தியா மூவியாக உருவாகும் 2 படங்கள்…டோலிவுட்டின் பிடியில் அஜித்

தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் செய்ய இருந்த விடாமுயற்சி தற்போது அஜித்தின் பிறந்த நாளான மே1 மாற்றப்பட்டுள்ளது. இதனால் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக  நடந்து வருகிறது. விரைவாக முடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வாரத்தின் ஏழு நாட்களும் சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. இதனால் படக்குழுவினர் ஓய்வு இன்றி அயராது உழைத்து வருகின்றனர்.

விடாமுயற்சி படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மக்கள், வாரத்தில் இரண்டு நாள் கண்டிப்பாக விடுமுறை வேண்டும் என்று அஜித் இடம் கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கையை ஏற்ற அஜித் இரண்டு நாள் விடுமுறை கொடுத்து விடாமுயற்சி சூட்டிங் லீவு விட்டு துபாயில் உள்ள வீட்டிற்கு சென்று உள்ளாராம். இதனால் விடாமுயற்சியின் படப்பிடிப்பு தாமதமாகும் என தெரிகிறது.

மொத்தமாக 1300 இந்திய மக்கள் மட்டுமே கொண்ட அஜர்பைஜானில் பக்கத்தில் வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் தமிழ் ரசிகர்கள் விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தை கண்டுபிடித்து அஜித்தை காண அலை அலையாக வருகிறார்களாம்.

மேலும் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் அஜித் அவர்கள் ரசிகர்களை கண்டு அவர்களுடன் பேசி புகைப்படம் எடுத்து வருகின்றார். தன்னைக் காண வரும் ரசிகர்களிடம் அன்புடன் உரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி கடலில் திளைக்க வைத்து வருகிறாராம்.

Also read: எந்த கொடியும் இல்ல ஸ்டிக்கரும் இல்ல.. கோடியில் வாரி வழங்கிய அஜித், பார்த்து கத்துக்கங்க தளபதி

Trending News