வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கங்குவாவை அடுத்து கேங்ஸ்டர் ஆக களம் காண உள்ள சூர்யா. பலநூறு கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம்

Kollywood Actor Surya’s upcoming films: சிறுத்தை சிவாவின் பரபரப்பான இயக்கத்தில் சூர்யாவின் கங்குவா வேகமாக ரெடியாகி வருகிறது அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெருங்கி உள்ளதை அடுத்து, தனது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார் சூர்யா.

தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் துவங்க உள்ளதாகவும் இதற்காக சூர்யா தொடர்ந்து 15 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் வாடிவாசலை கண்டு  குதுக்களிக்கலாம்.

மேலும் கங்குவாவின் மூலம் பல மொழிகளில் அறிமுகமாகும் சூர்யா அடுத்த ஆண்டு சூர்யா 44 காக பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் உடன் இணையவிருக்கிறார். 500கோடி பட்ஜெட்டில் கர்ணா என்ற பெயரில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள சரித்திர படத்திற்காக கமிட் ஆகியுள்ளார் சூர்யா. பெயருக்கு ஏற்றபடி சூரிய புத்திரன் ஆகவே நடிக்கிறார் சூர்யா.

Also Read : இதுக்கு தான் மும்பையில செட்டில் ஆனோம்.. தலையாட்டி பொம்மையாக மாறிய சூர்யா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின்  கிளைமாக்ஸ் இல் ரோலக்ஸ் கேரக்டரில் தோன்றினார் சூர்யா.  சில நிமிடங்கள் மட்டுமே  தோன்றிய இந்த கேரக்டர் ரசிகர்களை விசில் அடித்து ஆர்ப்பரிக்க செய்தது. அதேபோன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் முற்றிலும் கேங்ஸ்டர் ஆகவே நடிக்க உள்ளார் சூர்யா.

சுதா கொங்காராவின் சூரரை போற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதுடன் சூர்யாவுக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது. மீண்டும் இதே கூட்டணியில் கேங்ஸ்டர் கதையில் இணைந்துள்ளார் சூர்யா.  துல்கர் சல்மான் சூர்யாவின் நண்பனாக வருகிறார். துரோகம் மற்றும் நட்பு இரண்டையும் கலந்து இரட்டை வேடங்களில் தெறிக்க விட வருகிறார் சூர்யா. ஜனவரி மாதத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது.

சூர்யா அடுத்த ஆண்டின் மத்தியில் இரண்டு மாதங்களை ஒதுக்கி ஹாலிவுட்க்கு செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளது. கோலிவுட்டில் கலக்கியவர் ஹாலிவுட்டில்  ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். அடுத்த 2 ஆண்டுகளுக்கு சூர்யாவை எட்டி பிடிப்பது கடினம்.

Also Read :  சூர்யா வரலனா கூட அந்த ஹீரோவை வைத்து வாடிவாசல் முடிப்பேன்.. 100% உறுதியாக இருக்கும் வெற்றிமாறன்

Trending News