ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவிக்கும் நன்றி கெட்ட நடிகர்.. செய்நன்றி மறந்தால் இப்படித்தான்

Kollywood Actor Vadivel and vijayakanth controversy: தமிழ் திரையுலகையை ஆளும் பலரும் மதுரை மண்ணுக்கு சொந்தக்காரர்கள் ஆவார்கள். மதுரையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்திய சிங்கம், மீளா துயரில் தமிழக மக்களை ஆழ்த்திவிட்டு ஓய்வு எடுத்து வருகின்றார்.

சினிமாவை தாண்டி விருப்ப வெறுப்பின்றி அனைவராலும் கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். நேற்று காலை மூச்சுத் திணறல் காரணமாக உயிர் பிரிந்த விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கு இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ளது. திரை உலகத்தினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரால் வாழ்வு பெற்ற தம்பி ஒருவர், இறுதிச் சடங்கிற்கு வர பயப்பட்டு அஞ்சி கொண்டிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விஜயகாந்த் வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார் அப்போது மதுரையிலிருந்து வாய்ப்பு தேடி வந்த வடிவேலுக்காக சின்ன கவுண்டர் படத்தில் கதாபாத்திரம் இல்லாது போகவே குடை பிடித்து கூடவே இருக்கட்டும் என்று வாய்ப்பு அளித்து அவருக்கு 5 செட் துணிகளையும் வாங்கி கொடுத்தார்.

Also read: விஜயகாந்த் வாழ்க்கை கொடுத்த 6 வில்லன்கள்.. மீசைக்கு பேர் போன ராஜேந்திரன்

அப்போது கடவுளாக தெரிந்த விஜயகாந்த் அண்ணன், சற்று வாய்ப்புகள் வந்து முன்னேறியவுடன் வரம்பு மீறி வாய்க்கு வந்ததை கூறினார் வடிவேலு. 2011 சட்டசபை தேர்தலில் விஜயகாந்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து பலரின் கண்டனங்களுக்கு ஆளானார்.

இவர் தூற்றியதை தூசியென துடைத்தெறிந்த விஜயகாந்த், இவரைப் பற்றி எந்தவித விமர்சனத்தையும் கூறாமல் இவன் ஒரு பிறவிக் கலைஞன்! இவனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறவே செய்தார் என்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

விஜயகாந்தின் மன அழுத்தத்திற்கு இவரும் ஒரு காரணம் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர். இறுதிச்சடங்கில் வடிவேலு பங்கேற்கும் பட்சத்தில் விஜயகாந்தின் ஆதரவாளர்கள் வடிவேலுவை தாக்க கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது இதன் காரணமாக வடிவேலு, விஜயகாந்த் அவர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது.

Also read: விஜயகாந்த் வளர்த்து விட்ட 6 நடிகர்கள்..குடை பிடிக்க வந்து கொடூரமாக தாக்கிய மாமன்னன்!

Trending News