கோடி கொடுத்தாலும் இந்த கேரக்டர்ல அஜித் கூட நடிக்க மாட்டேன்.. வீம்பு பண்ணும் விஜய் சேதுபதி

Kollywood Actor Vijay sethupathi avoid negative role in tamil cinema: கொடுத்த கேரக்டரை திறம்பட செய்து முடிக்கும் விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. கோலிவுட், பாலிவுட் என வெற்றி வில்லன் ஆக வலம் வரும் விஜய் சேதுபதியை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இவர் பேசத் துவங்குவதற்கு முன்பாகவே சிரிக்க துவங்குகின்றனர் பாலிவுட் ரசிகர்கள். அந்த அளவுக்கு மாஸ் மேஜை கிரியேட் பண்ணி வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய் சேதுபதி கிடைத்த வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளும் இந்த தனித்துவ நாயகன், தன்னோடு நடிக்கும் சக நடிகர்கள் கூப்பிட்டதும் ஓடிப்போய் உதவும் தாராளமாக குணம் கொண்டவராக இருக்கிறார்.

ஏதாவது ஒரு படத்திற்கு கெஸ்ட் அப்பியரன்ஸ் என்றாலும் உடனே ஓகே சொல்லி நடிக்க துவங்கி விடுவார் விஜய் சேதுபதி.  தற்போது இவர் நடிப்பில் வெளியான ஜூங்கா, துக்ளக் தர்பார், டிஎஸ்பி, அனபெல் சேதுபதி போன்ற படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கை கொடுக்கவில்லை.

Also read: காலியாகும் விஜய் சேதுபதியின் சினிமா கேரியர்.. Sk கிட்டயே நெருங்க முடியால

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி,  விஜய் மற்றும் கமல் உடன் நடித்த மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்கள் எதிர்பாராத வெற்றியடைந்ததுடன் வசூலிலும் சக்கை போடு போட்டது.  ஹீரோவாக தோன்றும் விஜய் சேதுபதி சில சமயங்களில் எதார்த்த நடிப்பையும் மிஞ்சி கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்வதாக தோன்றவே  மக்கள் மனதில் தனக்குரிய இடத்தை தவற விடுவதாக தெரிந்தது.

இதுவே வில்லனாக இருக்கும்போது பக்கா கிரிமினலா, வேடத்திற்கு பொருந்தி  பார்வையாளர்களை மிரட்டி விடுவார் விஜய் சேதுபதி.  இதனாலையே வில்லன் வேடத்திற்கு இவரது பெயர் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் வில்லன் வேடம் என்றால் அது தனது ஹீரோ இமேஜை பாதிப்பதாகவும், தொடர்ந்து வில்லனாகவே நடிப்பது போல் தோன்றுவதாகவும், ஹீரோ படங்கள் வருவதில்லை என புலம்புகிறார் விஜய் சேதுபதி.

தற்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 63 படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு வந்துள்ளது. கோடி கொடுத்தாலும் வில்லன் மற்றும் கேமியோ ரோல்களில் நடிக்க மாட்டேன் என்று விம்பு பண்ணி வருகிறார் விஜய் சேதுபதி. வாய்ப்பை ஏற்கும் பட்சத்தில் மார்க் ஆண்டனி எஸ் ஜே சூர்யாவை போன்று விஜய் சேதுபதிக்கு புதிய ஒரு பரிமாணத்துடன் இவரை ஒரு வேறு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. “ஹீரோவாக நடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.. வில்லனாக நடித்தால் நல்லா இருக்கும்!” என்பது ரசிகர்களின் விருப்பம்

Also read: கடைசியா விஜய் சேதுபதி நம்பி இருக்கும் படம்.. ஹீரோவா நடிச்சு ஹிட் கொடுத்து அஞ்சு வருஷம் ஆச்சு