சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ஒரு டஜன் படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய காத்திருக்கும் ஜிவி பிரகாஷ்..திணறும் டாப் ஹீரோக்கள்

Kollywood Actors siddharth, vijaysethupathi, and GV commits many films: தமிழ் சினிமாவில் கதைகளுக்கும் பஞ்சமில்லை திறமையான நடிகர்களுக்கும் பஞ்சமில்லை. சில முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒன்று இரண்டு என பாலிசியை கடைபிடிக்கும் நிலையில், பலரும் பலவிதமான கதையோடு பல படங்களை நடித்து முடித்து ரிலீஸ் காக வெயிட்டிங் இல் உள்ளனர்.

தனது நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையிலும் சிறிது வாய்ப்பு கிடைத்தாலும் அதை பயன்படுத்தி உச்சாணிக்கொம்பை தொட்டுவிடும் ஏக்கத்திலும் பல படங்களில் கமிட் ஆகி கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. வருடத்திற்கு 10 படங்கள் ஆனாலும் துணிச்சலோடு ரிலீஸ் செய்வார்.

Also read: எதுக்கு இந்த மாதிரி கேள்வி கேக்குறீங்க.. விஜய் சேதுபதியை டென்ஷன் ஆக்கிய அந்த ஒரு கேள்வி

கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டிய மாமன்னன் விஜய் சேதுபதியவே மிஞ்சும் அளவுக்கு வெற்றி படமான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மாமன் மைத்துனனாக வந்த சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் இருவரும் டஜன் கணக்கில் படம் வைத்துக்கொண்டு தமிழ் திரை உலகிற்கு டஃப் கொடுத்து வருகின்றனர்.

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான சித்தார்த்திற்கு கடந்த ஆண்டு பெயர் சொல்லும் படியாக சித்தா அமைந்திருந்தது.  இவர் தொடர்ந்து கமலுடன் இந்தியன் 2, மாதவன் மற்றும் நயன்தாராவுடன் டெஸ்ட்  மற்றும் பிற மொழிகளிலும் சேர்த்து 13 படங்களுக்கும் மேலாக முடித்து வைத்து உள்ளார்.

அடுத்ததாக ஏ ஆர் ரகுமானின் கலை உலக வாரிசான ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் 2006 இல் வெயில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பாடகர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என அத்தனை அவதாரங்களையும் எடுத்து தமிழ் சினிமாவில்  தவிர்க்க முடியாத  கலைஞராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இளம் தலைமுறையினரின் ப்ளே லிஸ்டில் தவறாது இடம்பிடித்திருக்கும் இந்த மெல்லிசை மன்னன் ஜிவி பிரகாஷ் குமார் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் கேப்டன் மில்லர்,தங்கலான்,  மிஷன் சாப்டர் ஒன், வாடிவாசல் போன்ற படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும் நடிகராக இடி முழக்கம்,பாட்ஷா என்கிற ஆண்டனி, ராமனின்மோகனம் ஜானகி மந்திரம், 4ஜி போன்று டஜன் கணக்கில் படங்கள் நடிக்கவும் மற்றும் ரிலீஸுக்கும் காத்துக் கொண்டிருக்கின்றன.

Also read: அஜித், விஜய் செய்யாததை செய்யும் ஜீவி பிரகாஷ்.. கொண்டாடும் இயக்குனர்கள்!

Trending News