திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

படத்தில் சொந்த காரை பயன்படுத்திய 5 நடிகர்கள்.. ஸ்விஃப்ட் காரில் வெங்கட் பிரபுவை அலறவிட்ட அஜித்

Kollywood Actors used their own cars in his film: அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் சில பொருட்கள் நம் உணர்விலே கலந்து நம்மோடு பயணித்து நண்பன் ஆகி விடுவது வழக்கம்.  படிக்காதவன் படத்தில் தலைவர் டாக்ஸியை உயிருள்ள பொருளாகவே கருதி உருகுவார். சினிமாவில் பையா, பொல்லாதவன் போன்ற படங்களில் கார், பைக் என போன்ற உயிரற்ற பொருட்களும் கதாபாத்திரமாக வந்து படத்தின் உயிரோட்டத்தை அதிகபடுத்தி இருக்கும்.  அதுபோல நடிகர்கள் சிலர் தனது சொந்த வாகனங்களையே படத்திலும் உபயோகித்து இருந்தனர். அப்படியான சிலர்,

உதயநிதி: உலகிலேயே மிக உயர்ந்த எஸ்யூவி வகை அமெரிக்க தயாரிப்பு காரான ஹம்மர் வாங்கியதில் பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் உதயநிதி. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு உள்ளானது. இவ்வாறு சர்சைகளுக்கு உள்ளான மிக உயர்ந்த சொகுசு கார் ஹம்மரை தான் தயாரித்த படங்கள் ஆன ஏழாம் அறிவு மற்றும் மன்மதன் அன்பு போன்றவற்றில் உபயோகப்படுத்தி இருந்தார்.

விக்ரம்: சங்கரின் இயக்கத்தில் வேறுபட்ட கெட்டப்பில் விக்ரம் துணிச்சலாக நடித்து வெளிவந்த திரைப்படம் ஐ ஆகும். ரஜினி முருகன் மற்றும் பிச்சைக்காரன் படத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட பிராண்டான ஆடி காரை பிரபலங்கள் பலரும் தனது ஸ்டேட்டஸை மெயின்டைன் பண்ண பயன்படுத்தி வருகின்றனர். விக்ரம் தனது ஆடி காரை  ஐ  படத்திற்காக உபயோகித்து இருந்தது ஆச்சரியப்படுத்தியது.

Also Read: 2023-இல் மொத்தமா மானத்தை வாங்கிய ஐந்து ஹீரோக்கள்.. நண்பனை நம்பி ஏமாந்து கண்ணீர் விட்ட உதயநிதி

அஜீத்: வண்டி ஓட்டுவதில் கிங் என அனைவராலும் புகழப்பட்ட அஜித் வெங்கட் பிரபு உடைய இயக்கத்தில் தான் நடித்த மங்காத்தா படத்தில் தனது ஷிப்ட்  காரில் வெங்கட் பிரபுவை வைத்து ஒரு  ரிவர்ஸ் கியர் போட்டு 360 டிகிரி ஸ்பின் அடித்திருப்பார்.  ஸ்டண்ட்மேன் உதவி இல்லாமல் துணிச்சல் ஆக காரை இயக்கிய அஜித்திற்கு செம கெத்து.

விஷால்: லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி 2  ல் ராஜ்கிரண், விஷால், கீர்த்தி சுரேஷ் என பலரும் நடித்திருந்தனர் படம் முழுவதும் ராஜ்கிரண் மற்றும் விஷால் தனது ஜிப்ஸியிலேயே வலம் வந்தனர். கீர்த்தி சுரேஷ் தன் பங்குக்கு டிவிஎஸ் ஸ்கூட்டரில் வீலிங் செய்து செல்பி எடுத்து அலப்பறையை கிளப்பி இருப்பார்.  மேலும் இப்படத்தின் சூட்டிங்கில் விஷால் தனது பி எம் டபிள்யூ காரை உபயோகிப்படுத்தி இருந்தது கூடுதல் தகவல்.

ஜெயம் ரவி: இவர் தனது முதல் படமான  ஜெயம் படத்தின் வெற்றிக்கு பின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் துடிப்புமிக்க இளைஞனாக பைக்கில் வலம் வந்து பெண்கள் மனதை கொள்ளை கொண்டு இருந்தார்.  எம் குமரன் மற்றும் தில்லாலங்கடி படத்தில் வரும் பைக் காட்சிகளில் உண்மையாகவே தனது சொந்த பைக்கை யூஸ் பண்ணி உள்ளார் ஜெயம் ரவி.

Also Read: அதிகாரப்பூர்வமாக அஜித் இயக்குனரை கழட்டிவிட்ட கமல்.. மீண்டும் கார்த்திக்கிடம் தஞ்சம்

Trending News