சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நடிகையை காதலித்து கழட்டிவிட்ட பிரபலத்தின் மகன்.. செல்வாக்கை பயன்படுத்தி கேசை முடித்த பெரும்புள்ளி

Kollywood Gossip: ஒல வாய மூடினாலும் ஊறு வாய மூட முடியாது என ஒரு பழமொழி சொல்லுவாங்க அது நடிகைகளின் வாழ்க்கைக்கு தான் சரியாக இருக்கும் சினிமா என்று வந்துவிட்டால் ஒரு நடிகை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் வெற்றி பெற்று திருமண வாழ்க்கையிலும் செட்டில் ஆவது என்பது குதிரைக்கொம்பான விஷயம் இதில் தேவையில்லாத விஷயங்களில் சிக்கிக் கொண்டு உயிரை மாய்த்து நிறைய இளம் நடிகைகளே அதிகம்.

பொதுவாக இளம் நடிகைகளின் மரணம் தமிழ் சினிமாவுக்கும் மக்களுக்கும் எப்போதுமே ஒரு மர்மமான செய்திதான். எதற்காக இறந்தார் யாரால் இறந்தார் என எல்லோருக்கும் தெரிந்தாலும் விஷயம் கோர்ட் கேஸ் வரை சென்று தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைப்பது என்பது இதுவரை நடந்ததே கிடையாது. அப்படித்தான் இந்த நடிகையின் மரணமும் ஆகிவிட்டது.

அக்கட தேசத்திலிருந்து இறக்குமதியான நடிகை என்றாலும் அது தெரியாத அளவுக்கு திறமையாக நடிக்க கூடியவர். அதிலும் ஸ்டார் நடிகருக்கு இந்த நடிகையை ரொம்பவும் பிடிக்குமாம். முதல் படத்தில் அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தை அவருக்கு செல்ல பெயராகவும் மாறிவிட்டது. நன்றாக வளர்ந்து வந்து கொண்டிருந்த நேரத்தில் பெரும்புள்ளி ஒருவரது அண்ணன் மகன் மீது நடிகைக்கு காதல் வந்திருக்கிறது.

Also Read:பிரச்சனைக்கு பயந்து பம்மிய நடிகை.. சப்பை கட்டு கட்டி பாலா விவகாரத்திற்கு வைத்த முற்றுப்புள்ளி

இருவரும் ஒருவரை ஒருவர் உருகி உருகி காதலித்து இருக்கிறார்கள். வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் வீட்டை எதிர்த்தாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தில் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த காதலில் அந்த பெரும்புள்ளியின் தலையீடு அதிகரித்து இருக்கிறது. நடிகைக்கு வேலை கிடைக்காதவாறு முடக்கியதோடு, காதலனை சந்திக்க முடியாமலும் செய்திருக்கிறார்.

ஒரு பக்கம் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதோடு, மறுபக்கம் காதலனின் பிரிவு தனிமையும் நடிகையை வாட செய்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த நடிகை தற்கொலை செய்து கொண்டார் என சினிமா ரசிகர்களுக்கு நெஞ்சை உருக்கும் செய்தியும் வெளியாகி இருக்கிறது. தனியாக வீட்டில் இருந்தபோது தூக்க மாட்டிக்கொண்டிருக்கிறார் இந்த நடிகை. இவருடைய மரணம் கோலிவுட்டுக்கு பெரிய இழப்பாக ஆகிவிட்டது.

நடிகையின் காதல் விவகாரம் எல்லாம் தெரிந்திருந்தும் காவல்துறை அந்தப் பெரும்புள்ளியின் குடும்பத்தை நெருங்கவில்லை. வெளியில் எதுவுமே தெரியாதபடி பெரும்புள்ளி தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி கேஸை மூடிவிட்டார். இருந்தாலும் காதலியின் மரணம் பெரும்புள்ளியின் அண்ணன் மகனை ரொம்ப மன கஷ்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நடிகை இறந்து பல வருடங்கள் ஆகியும் அவர் இன்னும் திருமணம் செய்யாமல் தான் வாழ்ந்து வருகிறார்.

Also Read:பாலாவிடம் அடிவாங்கிய 6  நடிகைகள்.. அடி வாங்கி தையல் போடப்பட்ட வாரிசு நடிகை..!

Trending News