புதன்கிழமை, ஜனவரி 15, 2025

2024-ல் திருமணம் செய்து கொண்ட கோலிவுட் செலிபிரிட்டிகள்.. முரட்டு சிங்கிள் வாழ்க்கைக்கு குட்பை சொன்ன பிரேம்ஜி!

Keerthy Suresh: இந்த வருடத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் திருமண வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் முதல் பிரேம்ஜி வரை இந்த வருடம் திருமணம் செய்து கொண்டவர்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

2024-ல் திருமணம் செய்து கொண்ட செலிபிரிட்டிகள்

வரலட்சுமி சரத்குமார்: சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மூத்த மகள் நடிகை வரலட்சுமி இந்த வருடம் ஜூலை மூன்றாம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

தன்னுடைய நீண்ட நாள் காதலரான நிக்கோலாய் சச்தேவ் உடன் தாய்லாந்தில் இவருக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

ஐஸ்வர்யா அர்ஜுன்: நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் விருகம்பாக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

மேகா ஆகாஷ்: மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு தம்பதிக்கு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணமும் காதல் திருமணம் தான்.

ரம்யா பாண்டியன்: நடிகை ரம்யா பாண்டியன், தன்னுடைய காதலர் லவல் தவான் என்பவரை நவம்பர் 8ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய பல வருட காதலரான ஆன ஆண்டனியை டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

சித்தார்த்: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் தம்பதிக்கு கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

நாக சைதன்யா: நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா தம்பதியினர் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

பிரேம்ஜி: 40 வயதை தாண்டியும் முரட்டு சிங்கிள் என்று சுற்றிக் கொண்டிருந்த பிரேம்ஜிக்கு இந்த வருடம் கால் கட்டு போடப்பட்டு விட்டது.

இந்து என்பவரை கடந்த ஜூன் மாதம் பிரேம்ஜி திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

Trending News